பொது செய்தி

தமிழ்நாடு

கி.கிரி லோக் அதாலத்தில் 2,434 வழக்குகளுக்கு தீர்வு

Added : ஜூலை 14, 2019
Advertisement

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று நடந்த லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றத்தில், 2,434 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி, நீதிமன்றங்களில் தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க, லோக் அதாலத் எனப்படும், மக்கள் நீதிமன்றம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்கள், ஓசூர், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை நீதிமன்றங்களில் நேற்று லோக் அதாலத் நடந்தது. இதில், நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள், காசோலை வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரும் வழக்குகள், வங்கிகள் மற்றும் தொழிலாளர் நல வழக்குகள், பரஸ்பரம் பேசி தீர்த்து கொள்ள கூடிய குற்றவியல் வழக்குகள் என, 13 அமர்வுகளில் இருந்து மொத்தம், 6,091 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. அதில், 2,434 வழக்குகளில், 13 கோடியே, 58 லட்சத்து, 35 ஆயிரத்து, 456 ரூபாய் மதிப்பில், தீர்வு காணப்பட்டது. இந்த வழக்குகளுக்கான ஆணையை, மாவட்ட முதன்மை நீதிபதி மீனா சதீஷ் வழங்கினார். மகளிர் நீதிமன்ற நீதிபதி அன்புசெல்வி, குடும்ப நல நீதிமன்ற நீதிபதி கலாவதி உட்பட பலர் உடனிருந்தனர்.

தர்மபுரியில் ரூ.5.50 கோடிக்கு சமரசம்: தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் லோக் அதாலத் எனும் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கந்தகுமார் தலைமையில், மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாய நீதிபதி சீத்தாராமன் முன்னிலையில், சமரச வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டது. கூடுதல் மாவட்ட நீதிபதி ஜீவானந்தம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக்குழு செயலாளர் (பொ), சார்பு நீதிபதி ராஜ்குமார், மகளிர் விரைவு நீதிபதி பரமராஜ் ஆகியோரும் தனித்தனியாக அமர்வுகளில் பங்கேற்று சமரசம் செய்து வைத்தனர். இதேபோல், பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிபட்டி, அரூர் ஆகிய நீதிமன்றங்களில் குடும்ப நல வழக்கு, காசோலை, விபத்து, வங்கிக் கடன், உரிமையியல் வழக்குகள் என, மொத்தம், 14 அமர்வுகளாக நடத்தப்பட்டது. அதன்படி, மாவட்டத்தில் மொத்தம், 152 வழக்குகளில், ஐந்தரை கோடி ரூபாய்க்கு சமரச தீர்வு காணப்பட்டது. பின்னர், மாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள், மூங்கில், வேம்பு என, 14 மரக்கன்றுகளை நட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X