சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சூளகிரி, ஓசூரில் இருவர் மாயம்

Added : ஜூலை 14, 2019
Advertisement

ஓசூர்: ஓசூர், சூளகிரி பகுதியில் இருவர் மாயமாகியது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த, ஏ.கொத்தூர் பகுதியை சேர்ந்தவர் பாபு, 43. இவரது மனைவி கலைவாணி, 35. இவர்களுக்கு, சர்மா, 21, என்ற மகன் உள்ளார். கணவன், மனைவி இருவரும், கருத்து வேறுபாடு காரணமாக, தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். போச்சம்பள்ளியில், தன் மகன் சர்மாவுடன் கலைவாணி வசித்து வருகிறார். கடந்த, 12ல், தன் தந்தையை பார்க்க, ஏ.கொத்தூர் கிராமத்துக்கு சர்மா வந்தார். அங்கிருந்து புறப்பட்ட அவர், போச்சம்பள்ளி செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த தாய் கலைவாணி, சூளகிரி போலீசில் புகார் செய்தார். மாயமான சர்மாவை போலீசார் தேடி வருகின்றனர். ஓசூர் அடுத்த, எஸ்.முதுகானப்பள்ளி அருகே உள்ள, பாரந்தூர் பகுதியை சேர்ந்தவர் சீனப்பா, 55. கடந்த மாதம், 15ல், வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார். உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் விசாரித்தும் தகவல் கிடைக்காததால், நேற்று முன்தினம் அவரது மகன் ஹரிகிருஷ்ணா, 26, கெலமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X