சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சூளகிரியில் மாயமான விவசாயி ஆற்றங்கரையில் சடலமாக மீட்பு

Added : ஜூலை 14, 2019
Advertisement

ஓசூர்: சூளகிரி அருகே மாயமான விவசாயி, தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் சடலமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த காமன்தொட்டியை சேர்ந்தவர் ராஜப்பா, 50. விவசாயி; கடந்த, 11 காலை, ரேஷன் கடைக்கு சென்று வருவதாக கூறி விட்டு, பஜாஜ் பிளாட்டினம் பைக்கில் வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி குணம்மா, 45, நேற்று முன்தினம் சூளகிரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜப்பாவை தேடி வந்தனர். இந்நிலையில், கோபசந்திரம் தட்சின திருப்பதி கோவில் பின்புறம், தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள முட்புதரில், உடல் அழுகிய நிலையில் ராஜப்பா சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டது. தென்பெண்ணை ஆற்றங்கரையில், அவர் ஓட்டி வந்த, பிளாட்டினம் பைக் நின்று கொண்டிருந்தது. ராஜப்பா முகத்தில் காயம் உள்ளது. அதனால் அவர் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டிருக்கலாம் என, சூளகிரி போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். சடலத்தை கைப்பற்றி, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இது கொலையா? தற்கொலையா? என, விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X