பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - நாமக்கல்

Added : ஜூலை 14, 2019
Advertisement

பயணிகள் நிழற்கூடம் அவசியம்: மல்லசமுத்திரம் ஒன்றியம், மோர்பாளையம் - வையப்பமலை சாலையில் மாரம்பாளையம் சமத்துவபுரம் அமைந்துள்ளது. பஸ் நிறுத்தத்தில், பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படவில்லை. மாணவர்களும், பொதுமக்களும் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். ஒரு சிலர் வெயிலின் தாக்கத்தால், மயக்க நிலைக்கு சென்று விடுகின்றனர். இருக்கைகளுடன் கூடிய பயணிகள் நிழற்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கே.மாரிசங்கர், மாரம்பாளையம்.

சந்தை அருகே சுகாதார சீர்கேடு: குமாரபாளையம், இடைப்பாடி சாலை, வாரச்சந்தை அருகே, அதிகளவிலான குப்பை கொட்டி வைக்கப்பட்டு, பல நாட்களாக அள்ளப்படாமல் உள்ளது. இதனால், துர்நாற்றம் வீசுவதோடு, கடை வியாபாரிகள், குடியிருப்பு வாசிகள் என, பல தரப்பினரும் அவதிக்கு ஆளாகின்றனர். கொசுக்கள் உற்பத்தியாகி பல நோய்கள் ஏற்பட காரணமாக உள்ளது. இந்த குப்பையை தினமும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- செ.பிரகாஷ், குமாரபாளையம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X