ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 14, 2019

நாமக்கல்: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம், நாமக்கல்லில் நடந்தது. மாவட்ட தலைவர் கலைச்செல்வன் தலைமை வகித்தார். செயலாளர் மாதேஷ் கோரிக்கை குறித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில், 2019-20 பொதுமாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகளை ரத்து செய்ய வேண்டும். அங்கன் வாடியில் நியமனம் செய்யப்பட்ட, இளநிலை ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் வழங்க வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில், ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உள்ளான ஆசிரியர்களுக்கு, பணி மாறுதல், பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X