நிலக்கடலை சாகுபடிக்கு உயிர் தந்த சாரல் மழை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நிலக்கடலை சாகுபடிக்கு உயிர் தந்த சாரல் மழை

Added : ஜூலை 14, 2019

பள்ளிபாளையம்: வெப்படை சுற்றுவட்டாரத்தில், நிலக்கடலை சாகுபடி செய்த விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்திருந்த வேளையில், சாரல் மழையால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோடை மழை, தென்மேற்கு பருவ மழையை எதிர்நோக்கி, ஆண்டு தோறும் நிலக்கடலை சாகுபடி வைகாசி (மே ) மாதம் துவங்கும். இதை கருத்தில் கொண்டு தான் விவசாயிகள் சாகுபடி மேற்கொள்வர். பள்ளிபாளைம் சுற்றுவட்டாரத்தில் வெப்படை, பாதரை, வெள்ளிகுட்டை, எலந்தகுட்டை, ரங்கனூர், மக்கிரிபாளையம் மற்றும் பல பகுதிகளில், நிலக்கடலை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடப்பு மே மாதத்தில், கோடை கால பருவமழை சில நாட்கள் பெய்தது. இதை பயன்படுத்தி விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி செய்ய தொடங்கினர். தற்போது, செடிகள் வளர்ந்து வரும் கால கட்டத்தில், ஓரிரு மழை பெய்தால், சாகுபடி நன்கு வளர்ச்சி பெற்று அடுத்த கட்டத்திற்கு செல்லும். ஆனால், ஜூனில் தென்மேற்கு பருவமழை பெய்யாததால், சாகுபடி பாதிக்கப்பட்டது. கடந்த ஓரிரு நாட்களுக்கு முன், இரண்டு மணி நேரத்திற்கு மேலாக சாரல் மழை பெய்தது. இது வயல்களில் தேங்கி, மண்ணில் ஈரப்பதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், நிலக்கடலை சாகுபடி துளிர்விட்டு வளர ஆரம்பித்துள்ளது. அடுத்ததடுத்து மழை பெய்தால் போதும்; நல்ல வளர்ச்சி பெற்று விளைச்சல் அதிகரிக்கும். மழை குறைந்தால், அறுவடையில் காலதாமதம் ஏற்படும்; விளைச்சலும் குறையும். எனவே, பருவமழை பெய்யும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X