வலம்புரி விநாயகர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வலம்புரி விநாயகர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

Added : ஜூலை 14, 2019

நாமக்கல்: காவேட்டிப்பட்டி வலம்புரி விநாயகர், மகா மாரியம்மன் கோவிலில், நாளை கும்பாபி?ஷக விழா நடக்கிறது. நாமக்கல் அடுத்த காவேட்டிப்பட்டியில், வலம்புரி விநாயகர், மகா மாரியம்மன், கொங்கலம்மன், பகவதியம்மன், தங்காயி அம்மன் கோவில் உள்ளது. கோவில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. நாளை (ஜூலை, 15), கும்பாபி?ஷகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டு வருதல், கோ- பூஜை, கணபதி, மகாலட்சுமி வேள்வி நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், முதல்கால யாக வேள்வி, இரவு, 10:00 மணிக்கு, கோபுரம் கண் திறப்பு, கோபுர கலசம் வைத்தல், எண் வகை மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை, 9:00 மணிக்கு, விசேஷ சாந்தி, மூலிகை பொருட்கள் சேர்த்தல், மாலை, 5:00 மணிக்கு, மூன்றாம் கால யாக வேள்வி நடக்கிறது. நாளை அதிகாலை, 4:00 மணிக்கு, திருமுறை பாராயணம், நாடி சந்தனம், நான்காம் கால யாக வேள்வி, கலசங்கள் புறப்பாடு, காலை, 6:15 மணிக்கு, வலம்புரி விநாயகர், பகவதி அம்மன், தங்காயி அம்மன் கோவில் கும்பாபி?ஷகம், காலை, 9:15 மணிக்கு, சித்தி விநாயகர், மகா மாரியம்மன், கொங்கலம்மன் மற்றும் மூலஸ்தானத்துக்கு கும்பாபி?ஷகம் நடக்கிறது. தொடர்ந்து, அபி?ஷகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது; பிரசாதம், அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X