பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் தேசிய லோக் அதாலத்: 2,000 வழக்குகள் ரூ.16.21 கோடிக்கு தீர்வு

Added : ஜூலை 14, 2019
Advertisement

நாமக்கல்: மாவட்ட நீதிமன்றங்களில் நடந்த, தேசிய லோக் அதாலத் மூலம், 2,000 வழக்குகள், 16.21 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.
தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றமானது, நாமக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடந்தது. மாவட்ட முதன்மை தலைமை நீதிபதி இளவழகன் தலைமை வகித்தார். இதில், வழக்குகள் சமாதானமாகவும், விரைவாகவும் முடித்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. நீதிபதிகள் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள், உறுப்பினர்கள் கொண்ட அமர்வுகள் முன்னிலையில், வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. விபத்து, காசோலை, குடும்ப நலம், ஜீவனாம்சம், தொழிலாளர் நலன், மின் பயன்பாடு, வீட்டு வரி மற்றும் இதர பொதுபயன்பாட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. ஒவ்வோர் வழக்குகளும், விரைவாக தீர்ப்பளிக்கப்பட்டன. நிலுவையில் உள்ள வழக்குகள் தவிர, புதியதாக தாக்கல் செய்ய தகுதியுடைய வழக்குகளும் மற்றும் பிரச்னைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மாவட்டத்தில், நாமக்கல், ப.வேலூர், திருச்செங்கோடு, ராசிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில், 2,000 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவை, 16.21 கோடி ரூபாய்க்கு பைசல் செய்யப்பட்டன. ஏற்பாடுகளை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான சுஜாதா செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X