பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்

Added : ஜூலை 14, 2019
Advertisement

புதிய தார்ச்சாலை அமைக்கப்படுமா? குமாரபாளையம், தாலுகா அலுவலகம் செல்லும் இரு சாலைகளில், சாலை அமைப்பதற்காக ஜல்லி கலந்த சிமென்ட் கலவை போடப்பட்டுள்ளது. இவை ஜல்லி பெயர்ந்து வாகன ஓட்டிகளுக்கும், நடந்து செல்லும் மக்களுக்கும் இடையூறை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இது போல், நகர கூட்டுறவு வங்கி சாலை, கவுரி தியேட்டர் அருகே உள்ள சாலை, ராஜ ராஜன் நகர் சாலை, சரஸ்வதி தியேட்டர் சாலை உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில், சாலைப்பணிகள் முழுமை பெறாமல் உள்ளன.
வளைவு சாலையில் அறிவிப்பு தேவை: மல்லசமுத்திரம் ஒன்றியம், கள்ளுகடை பஸ் நிறுத்தத்தில் இருந்து, துத்திபாளையம் செல்லும் சாலையில், தினமும் ஏராளமான இலகுரக, கனரக, இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பகுதியில் மிகப் பெரிய வளைவு உள்ளதால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல், வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டு, அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, அங்கு வளைவு குறித்த அறிவிப்பு பலகை வைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

லாரியை நிறுத்துவதால் விபத்து அபாயம்: நாமக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில், பகல் மற்றும் இரவு நேரங்களில் டிரைவர்கள் ஓய்வு எடுப்பதற்காக லாரிகளை சாலையின் ஓரத்திலேயே நிறுத்தி விடுகின்றனர். அவ்வாறு நிறுத்தப்படும் லாரிகளில், சிக்னல் விளக்குகளை கூட எரியவிடுவதில்லை. மற்ற வாகனங்களை ஓட்டி வரும் டிரைவர்களுக்கு, சாலையோர லாரிகள் சரி வர தெரிவதில்லை. விபத்துகள் கண்ணிமைக்கும் நேரத்தில் நடக்கின்றன. டிரைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

குண்டும், குழியுமான சாலையால் அவதி: நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்., அக்லாம்பட்டியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் பிரதான சாலையில் இருந்து செல்ல, நாமகிரிப்பேட்டை ஏரியை ஒட்டி தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை அமைத்து, சில ஆண்டுகளிலேயே குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இந்த வழியாக, மாணவ, மாணவியர், விவசாயிகள் வந்து செல்கின்றனர். இரவில் செல்லும்போது தவறி விழுகின்றனர். புதிதாக சாலை அமைக்க வேண்டியது அவசியம்.

சாலையில் மண் குவியல்: பள்ளிபாளையம் ஒன்றியம், வெள்ளிகுட்டை நான்கு சாலை பிரிவில், சாலையோரத்தில் மண்குவியல் உள்ளது. வாகன ஓட்டிகளும், நடந்து செல்லும் மக்களும் அவதிப்படுகின்றனர். இரவு நேரத்தில் டூ வீலரில் செல்வோர் பாதிக்கப்படுகின்றனர். சறுக்கி விழ வாய்ப்புள்ளது. மழை பெய்தால் சேறும், சகதியுமாக மாறி, செல்லவே முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, மண் குவியலை அகற்றிவிட்டு, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X