பொது செய்தி

தமிழ்நாடு

இ.கம்யூ., பொதுக்கூட்டம்

Added : ஜூலை 14, 2019
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், இ.கம்யூ., கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. நகர செயலர் கேசவன் தலைமை வகித்தார். தேசியக் குழு உறுப்பினர் தா.பாண்டியன் பேசியதாவது: கச்சா எண்ணெய் இருக்கும் நாடு பணக்கார நாடு. தானியம் விளைவிக்க முடியாத நாடு செல்வந்தர் நாடு. ஆனால், தானியம் விளைவித்து தரும் நம் நாடு வறுமை நாடாக உள்ளது. மோடி தனியாக வெற்றி பெறவில்லை. கூட்டணி கட்சியுடன் தான் வெற்றி பெற்றார். இந்தியாவுக்கு வழிகாட்ட வேண்டிய இடத்தில் உள்ளது தமிழகம். ஸ்டாலின் உறுதியாக நின்று கூட்டணி அமைத்து வெற்றி பெற்றுள்ளார். அகழ்வாராய்ச்சி செய்ய வரும் அதிகாரிகள் சமஸ்கிருதம் பட்டம் பெற்று இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளனர். அ.தி.மு.க.,வினர் நீதிமன்றத்தையும் மதிப்பதில்லை. அரசியல் சட்டத்தையும் மதிப்பதில்லை. பொதுமக்கள் நீங்கள் எப்போதும் கம்யூனிஸ்டுக்கு ஆதரவு தாருங்கள். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X