சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உரம் வாங்கித் தருவதாக ரூ.45 லட்சம் மோசடி செய்தவர் கைது

Added : ஜூலை 14, 2019
Advertisement

நாமக்கல்: குறைந்த விலையில், உரம் வாங்கித்தருவதாக, இரண்டு பேரிடம், 45 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தை சேர்ந்த நில புரோக்கர் சிவக்குமார், 43. அவருக்கும், கோவை சாய்பாபா நகரை சேர்ந்த ஆத்மா சிவக்குமார், 49, என்பவருக்கும் இடையே நிலம் வாங்கி, கொடுத்ததில் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில், ஆத்மா சிவக்குமார், 'இந்தோனேஷியாவில் இருந்து, கப்பல் மூலம், தூத்துக்குடி துறைமுகத்திற்கு, உரம் வருகிறது. அதை, குறைந்த விலைக்கு வாங்கி விற்பனை செய்தால், நல்ல லாபம் கிடைக்கும்' என, சிவக்குமார், அவரது நண்பர் பொன்னுசாமி, 45, ஆகியோரிடம் தெரிவித்தார். அதை நம்பி சிவக்குமார், 35 லட்சம், பொன்னுசாமி, 10 லட்சம் என, மொத்தம், 45 லட்சம் ரூபாயை, ஆத்மா சிவக்குமாரிடம் கொடுத்துள்ளனர். ஆனால், பல மாதங்கள் கடந்தும், அவர் உரம் வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பித்தராமல் இழுத்தடித்துள்ளார். இதுகுறித்து, எஸ்.பி., அருளரசிடம், சிவக்குமார் புகார் அளித்தார். மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., ஈஸ்வரமூர்த்தி, இன்ஸ்பெக்டர் சுபாஷ் ஆகியோர் வழக்கு பதிந்து விசாரணை செய்தனர். அதில், ஆத்மா சிவக்குமார் மோசடி செய்தது தெரிந்தது. அதையடுத்து, அவரை கைது செய்து, விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X