சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'டைமிங்' போட்டியில் அதிவேகம்: 2 டிரைவர், 2 கண்டக்டர் கைது

Added : ஜூலை 14, 2019
Advertisement

திருச்செங்கோடு: 'டைமிங்' போட்டியில் போட்டி போட்டுக் கொண்டு பயணிகளுடன் அதிவேகமாக சென்று விபத்தை ஏற்படுத்திய, இரண்டு பஸ் ஓட்டுனர்கள் மற்றும் கண்டக்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
ராசிபுரத்தில் இருந்து ஈரோடு நோக்கி வந்த, 'சத்யசிவா' என்கிற பஸ்சும், ஆத்தூரில் இருந்து ஈரோடு நோக்கி வந்த, எஸ்.எம்.ஆர்., விஜயலட்சுமி என்கிற பஸ்சும் போட்டி போட்டுக் கொண்டு வந்தன. பல இடங்களில் ஒரு பஸ்சை மற்றொரு பஸ் முந்திச் செல்ல அதி வேகமாக வந்த போது, குமரமங்கலத்தில், சத்யசிவா பஸ், எஸ்.எம்.ஆர்., பஸ்சின் பின்பக்கத்தில் மோதியது. இந்த விபத்தில், 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இச்சம்பவம், கடந்த, 10 மாலை, 3:00 மணிக்கு நடந்தது. திருச்செங்கோடு ரூரல் போலீசார் விசாரித்தனர். 'டைமிங்' போட்டியில் பஸ்கள் வேகமாக இயக்கப்பட்டதும், ஓட்டுனர் மற்றும் கண்டக்டர்கள் பொறுப்பற்ற முறையில் செயல் பட்டதும் தெரியவந்தது. டி.எஸ்.பி., சண்முகம் இரண்டு பஸ்களின் ஓட்டுனர்கள் மற்றும் கண்டக்டர்களை கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, ஓட்டுனர்கள் பார்த்தசாரதி, குணசேகரன், கண்டக்டர்கள் மணிகண்டன், பிரபு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மாவட்டத்தில் முதல் முறையாக இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X