பயிர் அறுவடை பரிசோதனைக்கு தொகுப்பூதியத்தில் பணியாளர் நியமனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பயிர் அறுவடை பரிசோதனைக்கு தொகுப்பூதியத்தில் பணியாளர் நியமனம்

Added : ஜூலை 14, 2019

கரூர்: 'பயிர் அறுவடை பரிசோதனைக்கு, தொகுப்பூதியத்தில் பணியாளர் நியமனம் செய்யப்பட உள்ளனர்' என, கலெக்டர் அன்பழகன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில், பயிர் அறுவடை பரிசோதனைகளை மேற்கொள்ள தகுதி வாய்ந்த பணியாளர்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில், பணித் தேர்வு முகமை மூலம் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. பணித்தேர்வு முகமை பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் வழங்குவதில் குறைந்தபட்சம், மூன்று ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணியாளர் அறுவடைப்பணி மற்றும் அதை சார்ந்த பணிகளை மேற்கொள்ள வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த இளநிலை பட்டப்படிப்பு மற்றும பட்டயப் படிப்புடன் கணினி இயக்க தெரிந்தவராக இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு, மாதாந்திர தொகுப்பூதியம், 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இப்பணியை மேற்கொள்ள தகுதி வாய்ந்த பணி நியமன முகமைகள், பணியாளர்களை தேர்வு செய்து வழங்க, தங்கள் விபரம், அனுபவம் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்களை வழங்க சேவைக் கட்டணம் ஆகியவற்றை குறிப்பிட்டு, வேளாண் இணை இயக்குனர், கலெக்டர் அலுவலக வளாகம், தான்தோன்றிமலை, கரூர் மாவட்டம், 639 - 007 என்ற முகவரிக்கு வரும், 26க்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X