பொது செய்தி

தமிழ்நாடு

தினமும் செய்தித்தாள் படியுங்கள்: தேர்வில் வெற்றி பெற கலெக்டர் யோசனை

Added : ஜூலை 14, 2019
Advertisement

கரூர்: 'மாணவர்கள் தினமும் செய்தித்தாள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்' என, கலெக்டர் அன்பழகன் தெரிவித்தார்.
கரூர் ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியில், குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு துவக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில், கலெக்டர் அன்பழகன் தலைமைவகித்து பேசியதாவது: தேர்வில் பங்கேற்போர் பாடத்திட்டத்துக்கு ஏற்றவாறு நேரத்தை திட்டமிட்டுக் கொள்ளுங்கள். தொடர்ந்து ஒரே பாடத்தை படிப்பதால் சலிப்பு ஏற்படலாம். அதனால் ஒரு மணி நேரத்திற்கு ஒரு பாடம் என்று எடுத்துக்கொள்ளுங்கள். நேரத்தை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும். பாடத்திட்டத்தை முறையாக தெரிந்துகொண்டு அதற்கு தகுந்தாற்போல் புத்தகங்களை படிக்க துவங்குங்கள். ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான பாடப்புத்தகங்களை படித்தாலே தேர்ச்சி பெற, பெரும்பான்மையான வாய்ப்பு உள்ளது. உங்களைச் சுற்றி நடக்கும் செய்திகளை அறிந்து கொள்ளுங்கள். அன்றாடம் செய்தித்தாள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். கடின உழைப்போடும், விடா முயற்சியோடும், தன்னம்பிக்கையோடும் தொடர்ந்து படித்தால் வெற்றி வாய்ப்பு உங்களை தேடி வரும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலர் அன்பு, ஆர்.டிஓ., சந்தியா, துணை கலெக்டர் (பயிற்சி) விஷ்ணுப்பிரியா, கல்லூரி செயலர் நீலகண்டபிரியா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X