பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்

Added : ஜூலை 14, 2019
Advertisement

எழுத்துகள் அழிந்த தெருபெயர் பலகை: கரூர், முத்துராஜபுரம் தெருவில் நகராட்சி சார்பில் தெருபெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இப்பலகை சேதமடைந்து, எழுத்துகள் முற்றிலும் அழிந்த நிலையில் உள்ளது. நகராட்சி அதிகாரிகள் அதை மாற்றி வைக்காமல் உள்ளனர். இதனால், புதிதாக செல்பவர்கள், வீதியை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றனர். நகரில், பல இடங்களில் இது போல் தெருபெயர் பலகைகள் சேதமடைந்து பயனில்லாத நிலையில் உள்ளன அவற்றை சீரமைக்க வேண்டியது அவசியம்.
சாலை நடுவே தடுப்புசுவர் சேதம்: கரூர், ஜவஹர் பஜாரில் வர்த்தக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன. இதனால், போக்குவரத்து நெரிசலை சரி செய்ய, காமராஜர் சிலை முதல், ஈஸ்வரன் கோவில் பிரிவு வரை, சாலை நடுவே தடுப்பு சுவர் கட்டப்பட்டது. வேகமாக செல்லும் வாகனங்கள் மோதுவது போன்ற காரணங்களால், இச்சுவர் பல இடங்களில் இடிந்து விட்டது. இதனால், இரவில் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் இடிந்த சுவரில் மோதி விபத்துக்குள்ளாகின்றனர். சுவரை சீரமைக்க வேண்டும்.

கழிப்பறை பராமரிப்பு தேவை: வாங்கல் அக்ரஹாரம் பகுதியில், பல ஆண்டுகளுக்கு முன், பொது கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டது. சரியான பராமரிப்பு இல்லாததால், கட்டடம் சேதமடைந்து, பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு, கழிப்பிடம் பூட்டி வைக்கப்பட்டது. இதனால், அப்பகுதி மக்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்த வேண்டியுள்ளது. முட்செடிகள் வளர்ந்து, முற்றிலும் சேதமடைந்த நிலையில் இருக்கும் கழிப்பிடத்தை சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும்.

குழாய் உடைப்பு; குடிநீர் வீண்: கரூர் சின்ன ஆண்டாங்கோவிலில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஆழ்துளை குழாய் அமைத்து, சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டது. தற்போது, குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது. நகராட்சி பகுதியில், ஐந்து நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அப்பகுதி மக்கள் ஆழ்துளை குழாய் தண்ணீரையே நம்பியுள்ளனர். இந்நிலையில், குழாய் உடைந்ததால், தண்ணீர் பற்றாக்குறையால் திண்டாடுகின்றனர். உடைந்த குழாயை மாற்ற வேண்டும்.

குவியும் குப்பை அகற்றப்படுமா? கரூர் வேலுசாமிபுரத்தில், ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. ஆனால், இப்பகுதியில், குப்பை சேகரிக்க போதுமான தொட்டிகள் வைக்கப்படவில்லை. மக்கள், குப்பையை சாலையோரத்தில் கொட்டுகின்றனர். இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. தொற்று நோய் அபாயம் உள்ளதாக, அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இப்பகுதியில் குவிந்திருக்கும் குப்பையை அள்ளி அப்புறப்படுத்த வேண்டும். குப்பை சேகரிக்க வசதியாக தொட்டிகள் வைக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X