கோவில் கருவறை சென்று பக்தர்கள் சுவாமி தரிசனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவில் கருவறை சென்று பக்தர்கள் சுவாமி தரிசனம்

Added : ஜூலை 14, 2019

கரூர்: கரூர் பண்டரிநாதன் கோவிலில், பக்தர்கள் கருவறை சென்று சுவாமி தரிசனம் செய்யும் ஆஷாட ஏகாதசி விழா நடந்தது. கரூர், நகரிலுள்ள பண்டரிநாதன் கோவிலில், ஆஷாட ஏகாதசி விழா, துக்காராம் கொடி புறப்பாடுடன் துவங்கியது. ஆஷாட ஏகாதசியான நேற்று முன்தினம் காலை, 7:00 மணி முதல், 10:00 மணி வரை. கருவறையிலுள்ள பண்டரிநாதன் சுவாமியை, பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு, மாலையில் திவ்ய நாம சங்கீர்த்தனை பஜனை நடந்தது. பின், சுவாமி திருவீதி உலா நடந்தது. நேற்று காலை காவிரி ஆற்றிலிருந்து சுவாமிக்கு தீர்த்தவாரி நடந்தது. மாலை, 6:00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் தீபாராதனையுடன் விழா நிறைவடைந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X