10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் திருவிழாவுக்கு குதிரை துலுக்கல் மூலம் அனுமதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் திருவிழாவுக்கு குதிரை துலுக்கல் மூலம் அனுமதி

Added : ஜூலை 14, 2019

கரூர்: பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் திருவிழாவை நடத்த, எட்டு கிராம மக்கள் திரண்டு, குதிரை துலுக்கல் மூலம் சுவாமியின் உத்தரவை பெற்றனர். கரூர் அருகே சணப்பிரட்டியில், செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவை, பத்தாண்டுகளுக்கு ஒருமுறை, சணப்பிரட்டி, மூலக்காட்டனூர், பசுபதிபாளையம், வெள்ளாளபட்டி உள்ளிட்ட எட்டு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று சேர்ந்து நடத்தி வருகின்றனர். இதற்காக அம்மை அழைத்தல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கோவில் குதிரையை மூன்று கி.மீ., தூரம் ஊர்வலமாக அழைத்துக் கொண்டு எல்லை கோவிலுக்கு சென்றனர். அங்கு பூஜை செய்து, கோவில் முன் குதிரையை நிறுத்தி, அதற்கு தீர்த்தம், திருநீறு தெளித்து, சுற்றி அமர்ந்து, சுவாமியின் உத்தரவுக்கு காத்திருந்தனர். இரவு, 8:30 மணியளவில் குதிரை துலுக்கி திருவிழா நடத்த அனுமதி கிடைத்தது. அதன்பின், திருவிழா நடத்துவதற்கான பணிகளை கிராம மக்கள் துவக்கினர். அதன்படி, வரும் 17ல் தேர்த்திருவிழா, 19ல், அம்மன் குடிபுகுதல் விழா நடக்கிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X