சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏ.டி.எம்., வாகனத்தில் கொள்ளையடித்த மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் கைது

Added : ஜூலை 14, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement

ஈரோடு: ஈரோட்டில், நடமாடும் ஏ.டி.எம்., வாகனத்தில் கொள்ளையடித்த, வங்கி தற்காலிக ஊழியரை, போலீசார் கைது செய்தனர். பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு சொந்தமான, நடமாடும் ஏ.டி.எம்., இயந்திர வாகனத்தில், ஒன்பது லட்சத்து, 55 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது, நேற்று முன்தினம் தெரிய வந்தது. வாகனத்தில் தீ விபத்தை ஏற்படுத்தி, தப்பிக்க முயன்றதால், அம்பலத்துக்கு வந்தது. இதுதொடர்பாக வாகன டிரைவர், வங்கி ஊழியர் இருவர் என மூவரிடம், கருங்கல்பாளையம் போலீசார் தீவிரமாக விசாரித்தனர். அந்தியூரை அடுத்த, பிரம்மதேசத்தை சேர்ந்த, பெத்தான் மகன் சரவணன், 33, திருடியது தெரியவந்தது. மத்திய கூட்டுறவு வங்கியில், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டராக, தற்காலிகமாக பணிபுரிகிறார். கூடுதல் பொறுப்பாக, நடமாடும் ஏ,டி.எம்., இயந்திர வாகன பொறுப்பு அலுவலராகவும் இருந்தார்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: வேன் டிரைவர் உள்ளிட்ட இருவர், டீ சாப்பிட, சென்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, ஏ.டி.எம்., இயந்திரத்தில் இருந்த பணத்தை, சரவணன் திருடிச் சென்றார். ஏ.டி.எம்., இயந்திர பாஸ்வோர்டு தெரியும் என்பதால், அவருடைய மொபைல்போன் மூலம், திறந்துள்ளார். பணத்தை, அவருடைய டி.வி.எஸ். மெஜஸ்டிக் பைக் சீட்டுக்கு அடியில் மறைத்து வைத்தார். ஏ.டி.எம்., இயந்திர கேமிரா பதிவுகளையும், மொபைல் போனிலேயே அழித்துள்ளார். அரை லிட்டர் கேனில், பெட்ரோலை எடுத்துக்கொண்டு வாகனத்துக்குள் சென்று, தீ வைத்துள்ளார். இதில் அவர் கொண்டு சென்ற கேன், பாதி எரிந்த நிலையில் கிடந்தது. இவை அனைத்தும், ஈரோடு பஸ் ஸ்டாண்டில் உள்ள, போலீசாரின் 'சிசிடிவி' கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. அதை ஆதாரமாக கொண்டு கேட்டபோது, திருடியதை ஒப்புக்கொண்டார். அவரிடம் இருந்து, 9.55 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாறு போலீசார் கூறினர். மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் சந்திரபிரபா அளித்த புகாரின்படி, சரவணன் மீது, ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிந்து, கைது செய்யப்பட்டார். இவ்வாறு போலீசார் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
14-ஜூலை-201919:00:33 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan இட ஒதுக்கீட்டில் வந்தவன் திருடனாய் இருப்பதில் ஆச்சரியமில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X