பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர் திட்டம் குறித்து பெருந்துறையில் தவறான பிரசாரம்; தளபதி குற்றச்சாட்டு

Added : ஜூலை 14, 2019
Advertisement

கோபி: ''கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம் குறித்து, பெருந்துறையில் தவறான பிரசாரம் நடக்கிறது,'' என, தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன சங்க தலைவர் சுபி தளபதி, தெரிவித்தார்.


ஈரோடு மாவட்டம், கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம், கோபியில் நேற்று நடந்தது. தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன சங்க தலைவர் சுபி தளபதி பேசியதாவது: எங்கள் கோரிக்கை ஒன்றே ஒன்று தான். கொடிவேரியில், தடப்பள்ளி வாய்க்காலுக்கு, தண்ணீர் பிரியும் இடத்தில், நீர் அழுத்தம் இருக்கும் இடத்தில், குடிநீர் திட்டத்தை அமைக்க வேண்டாம். இதனால், எங்களுடைய பாசனம் கெட்டுவிடும். குடிநீர் திட்டத்தை நாம் எதிர்க்கவில்லை. பவானிசாகர் அணை முதல், பவானி வரை, 48 கூட்டு குடிநீர் திட்டங்கள் உள்ளன. தினமும், 100 கோடி லிட்டர், 70 லட்சம் மக்களுக்கு, பவானி ஆற்றுநீர் தாகம் தணிக்கிறது. கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம் தொடர்பாக, பெருந்துறை மக்களுக்கு தவறான கருத்துகளை பரப்புகின்றனர். கோபி பகுதி மக்கள், தண்ணீரை தர மறுப்பதாக, பெருந்துறையில் தவறான பிரசாரம் செய்கின்றனர். எங்கள் எதிர்ப்பில், கூட்டத்தில் அரசியல் இல்லை. இந்த திட்டத்தை நாம் அனுமதித்ததால், இதே இடத்தில் மூன்று திட்டத்தை செயல்படுத்த, குடிநீர் வடிகால் வாரியம் தயாராக உள்ளது. எனவே இத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். இதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X