பொது செய்தி

தமிழ்நாடு

பவானிசாகர் அணை நீர்மட்டம் 59 அடியை எட்டியது; ஒரே வாரத்தில் 2 அடி உயர்வு

Added : ஜூலை 14, 2019
Advertisement

புன்செய்புளியம்பட்டி: நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மழை பெய்து வருவதால், பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம், 59 அடியை எட்டியது.


ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை, 105 அடி உயரம்; 32.8 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதிகளில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், கோவை மாவட்டம், பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணை நீர்மட்டம், 90 அடியை எட்டியுள்ளது. மின் உற்பத்திக்காக, 6,000 கன அடி வரை, பவானி ஆற்றில் நீர் திறக்கப்பட்டுள்ளது. பவானி ஆற்றில் திறக்கப்படும் நீர், பவானிசாகர் அணைக்கு வருகிறது. இதனால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் காலை, 500 கன அடியாக இருந்த நீர்வரத்து, மாலை, 2,566 கனஅடியாக அதிகரித்தது. நேற்று காலை அணைக்கு வினாடிக்கு, 1,964 கன அடி நீர் வந்துகொண்டிருந்தது. மதியம், 1:00 மணி நிலவரப்படி,அணையின் நீர்மட்டம், 59 அடியை எட்டியது. நீர் இருப்பு, 6.9 டி.எம்.சி., யாக இருந்தது. குடிநீர் தேவைக்காக, 200 கன அடி தண்ணீர் பவானி ஆற்றில், திறக்கப்படுகிறது. கீழ்பவானி வாய்க்காலில், ஐந்து கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், அணையின் நீர்மட்டம், ஒரு வாரத்தில், இரண்டு அடி உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X