பொது செய்தி

தமிழ்நாடு

'தமிழகம் தொழில் துவங்க உகந்த மாநிலம்'

Added : ஜூலை 14, 2019
Advertisement

ஓசூர்: ''தமிழகம் தான் தொழில் துவங்க உகந்த மாநிலம்,'' என, தமிழக தொழில்துறை அமைச்சர் சம்பத் கூறினார். ஓசூரில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழ்நாடு, தொழில் வர்த்தக எளிதாக்குதல் சட்டம், 2018ல் அமல் படுத்தப்பட்டது. இதில், 90.38 மதிப்பெண் பெற்றுள்ளோம். இதை வலிமைப்படுத்தும் வகையில், தொழில் நிறுவனங்களுக்கு இன்னும் எளிதாக என்ன வழிகள் உள்ளன. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க ஆக்கப்பூர்வமாக வழிகள் என்ன உள்ளன என்பதற்கான, கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் பழனிசாமி, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, 3 சதவீத வட்டி மானியத்தை, 6 சதவீதமாக உயர்த்தி உள்ளார். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் இன்னும் வலிமை பெற வாய்ப்பாக இருக்கும். ஓசூரில் ராணுவ தளவாட வழித்தடத்தை, மத்திய அரசு அறிவித்துள்ளது. ஓசூர் முதன்மையானதாக வர வேண்டும். சென்னை, திருச்சி, சேலம், கோவை, ஓசூர் பகுதிகளில், ராணுவ தளவாடங்களுக்கான தொழில் வழிச்சாலை முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என, வலியுறுத்தி உள்ளோம். தமிழகம் ஜவுளி, தோல் மற்றும் ரசாயன பொருட்களில் முன்னணியில் உள்ளது. 12 துறைகளில் தொடர்ந்து முன்னணியில் உள்ளோம். கர்நாடகாவுக்கு தொழில் வளம் செல்லவில்லை. தமிழகம் தான், தொழில் துவங்க உகந்த மாநிலம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X