பொது செய்தி

தமிழ்நாடு

புதிய இஞ்சி வரத்தால் விலை சரிவு

Added : ஜூலை 14, 2019
Advertisement

சேலம்: குளிர்பிரதேசங்களில் இருந்து, புதிய இஞ்சி விற்பனைக்கு வரத்தொடங்கியுள்ளதால், பழைய இஞ்சியின் விலை சரிந்துள்ளது.


ஊட்டி, கொடைக்கானல், நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்கள், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், கேரளாவின் ஆலப்புழா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, தமிழக மார்க்கெட்டுகளுக்கு, இஞ்சி விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக, சென்னை - கோயம்பேடு, சேலம் - தலைவாசல், திண்டுக்கல் - ஒட்டன்சத்திரம், மதுரை - மாட்டுத்தாவணி, நெல்லை, நாகர்கோவில் - வடசேரி மார்க்கெட்டுகளுக்கு, கடந்த ஏப்ரல் வரை, தினமும், 100 லாரிகளில் இஞ்சி விற்பனைக்கு வந்தது. ஏப்ரல் முதல் வாரம், உழவர்சந்தைகளில், இஞ்சி கிலோ, 80 ரூபாய், வெளி மார்க்கெட்டில், 100 ரூபாய்க்கு விற்றது. ஏப்ரல் இறுதியில், வரத்து சரிய தொடங்கியதால், உயர்ந்து வந்த இஞ்சி விலை, நேற்று முன்தினம், உழவர்சந்தைகளில் கிலோ, 200 ரூபாய், வெளி மார்க்கெட்டில், 250 ரூபாய்க்கு விற்றது. இந்நிலையில், குளிர்பிரதேசங்களில் இருந்து, 20 லாரிகளில், விற்பனைக்கு வந்த, புதிய இஞ்சி வரத்து, நேற்று, 70 லாரிகளாக உயர்ந்தது. இதனால், பழைய இஞ்சியின் விலை கட்டுக்குள் வந்துள்ளது. அதன்படி, கிலோவுக்கு, 20 ரூபாய் சரிந்து, உழவர்சந்தைகளில், 180 ரூபாய், வெளி மார்க்கெட்டில், 230 ரூபாய்க்கு விற்றது. புதிய இஞ்சி, 150 முதல், 170 ரூபாய் வரை விற்பனையானது. இதன் வரத்து, மேலும் அதிகரிக்கும் நிலையில், பழைய இஞ்சி விலை, மேலும் குறையும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X