பொது செய்தி

தமிழ்நாடு

இரும்பாலையை தனியாருக்கு விற்க முயற்சி: நிலம் கொடுத்த விவசாயிகள் கண்டன பேரணி

Added : ஜூலை 14, 2019 | கருத்துகள் (1)
Advertisement

வீரபாண்டி: இரும்பாலையை தனியாருக்கு விற்க முயற்சிப்பதை கண்டித்து, அதற்கு நிலம் கொடுத்த விவசாயிகள், மாட்டு வண்டி, ஏர் கலப்பையுடன் கண்டன பேரணி நடத்தினர்.


மத்திய அரசு, சேலம், இரும்பாலை நஷ்டத்தில் செயல்படுவதாக கூறி, அதை தனியாருக்கு விற்கும் முயற்சியில் ஈடுபடுவதை கண்டித்து, ஓராண்டுக்கு மேலாக, தொழிலாளர்கள், பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம், ஆலையை தனியாருக்கு விற்பனை செய்வதற்கான, உலகளாவிய ஒப்பந்தம் கோரப்பட்டதை கண்டித்து, அன்று, தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நேற்று காலை, ஆலையின் இரண்டாவது நுழைவாயில் முன், 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தங்கள் குடும்பத்தினருடன் வந்து, இரும்பாலையை தனியாருக்கு விற்கும் முயற்சியை கைவிடக்கோரி, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து, அங்கிருந்து, மூன்றாவது நுழைவாயில் வரை, கண்டன பேரணி நடத்தினர். இதில், இரும்பாலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள், மாட்டு வண்டி, ஏர் கலப்பையுடன் பங்கேற்றனர். முன்னதாக, ஆர்ப்பாட்டத்தின்போது, சேலம், தி.மு.க.,- எம்.பி., பார்த்திபன் பேசுகையில், ''15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனத்தை, குறைந்த விலைக்கு தனியாருக்கு விற்பதை தடுக்கக்கோரி, லோக்சபா மற்றும் துறை அமைச்சரிடம் தெரிவித்து, தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என்றார். சேலம் வடக்கு தொகுதி, தி.மு.க.,- எம்.எல்.ஏ., ராஜேந்திரன் உள்பட, அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
14-ஜூலை-201918:56:06 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan நஷ்டமடைந்த ஆலையை விற்பதில் தவறில்லை. தனியார் நிறுவனமானால்அரசியல் தலையீடு இருக்காது. இடஒதுக்கீட்டில் திறமைறயற்றவர் நுழைந்து தண்டம் சம்பளம் வாங்குவது தடுக்கப்படும். அதனால் தனியாருக்கு தருவதில் தவறில்லை. இதை வைத்து திராவிட திருடர்கள் அரசியல் செய்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X