பொது செய்தி

தமிழ்நாடு

அணையில் வண்டல் மண் எடுக்க ஆர்வம் காட்டாத விவசாயிகள்

Added : ஜூலை 14, 2019
Advertisement

மேட்டூர்: மேட்டூர் அணையில் வண்டல் மண் எடுக்க, அரசு அனுமதி வழங்கியும், விவசாயிகள் போதிய ஆர்வம் காட்டவில்லை.


மேட்டூர் அணை நீர்பரப்பு பகுதியை தூர்வார, வண்டல் மற்றும் செம்மண் அள்ளிச்செல்ல, ஒரு வாரத்துக்கு முன், அரசு அனுமதி வழங்கியது. வண்டல் மண்ணை அள்ள, அணையின் உட்பகுதியில், 1 கி.மீ., தூரம் மேடு, பள்ளமான சாலையில் செல்ல வேண்டியுள்ளது. அங்கு, வண்டல் மண்ணை, ஒரு டிராக்டர் ஏற்றி, சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு கொண்டு செல்ல, 1,500 முதல், 2,000 ரூபாய் வரை செலவாகிறது. அந்த அளவு வசதி இல்லாததால், வண்டல் மண் ஏற்றிச்செல்ல விவசாயிகள் தயங்குகின்றனர். அணை சுற்றுப்பகுதியில், செங்கல் சூளைகள் அதிகம் காணப்படுகின்றன. விவசாயிகளுக்கு பதிலாக, சூளை உரிமையாளர்களே, லாரி, டிராக்டரில் செம்மண் ஏற்றிச்செல்கின்றனர். அணையில், வண்டல் மண்ணை விட, செம்மண்ணே தினமும், 100க்கும் மேற்பட்ட டிராக்டர், லாரிகளில் ஏற்றிச்செல்லப்படுகிறது. ஒரு வாரத்தில், அணை நீர்பரப்பு பகுதியில், 1,400 சதுர மீட்டர் வண்டல், செம்மண் அள்ளப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X