பொது செய்தி

தமிழ்நாடு

'சந்திராயன் - 2'ல் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாகம்: சேலம் உருக்காலையில் தயாரித்து சாதனை

Added : ஜூலை 14, 2019
Advertisement

சேலம்: 'சந்திராயன் - 2' ராக்கெட்டில், சேலம் உருக்காலையில் தயாரிக்கப்பட்ட, 'ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்' பயன்படுத்தப்பட்டுள்ளது.


இஸ்ரோ(இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்), பொதுத்துறை நிறுவனமான செயில்(ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இண்டியா லிமிடெட்) அமைப்புடன் இணைந்து, இந்தியாவிலேயே, பாகங்கள் உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக, கடுங்குளிர் இன்ஜினான, கிரையோஜெனிக் ராக்கெட் தயாரிப்புக்கு தேவையான, 'ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்' உருவாக்கப்பட்டது. முதலில், இஸ்ரோவின் திரவ உந்துதல் அமைப்பு மைய விஞ்ஞானிகள், செயிலின் உருக்காலை குழுவினர் இணைந்து, சோதனை முறையில், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் சுருள்கள் தயாரித்தனர். 'ஐ.சி.எஸ்.எஸ்., - 1218 - 321' வகையைச் சேர்ந்த, இந்த சுருள்கள், 4 மி.மீ., தடிமனில், சேலம் உருக்காலையின் வெப்ப உருட்டு ஸ்டெக்கல் மில்லில் உருட்டப்பட்டன. பின், இஸ்ரோவின் தேவைக்கேற்ப, 2.3 மி.மீ., தடிமன் தகடாக மாற்றப்பட்டு, கடுங்குளிர் இன்ஜினான, 'சி.இ., - 20' க்கு பயன்படுத்தப்பட்டது. உருக்காலை அளித்த, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தகடுகள், சிறப்பான மேல் வடிவமைப்பு, விண்வெளி தேவையை பூர்த்தி செய்ய, கடினமான அளவீடு, துல்லிய வேலைப்பாடு உள்ளதாக, இஸ்ரோ உறுதிசெய்துள்ளது. இதனால், இஸ்ரோவின் மற்ற தேவைகளான, 304 எல், 316 டி.ஐ., கிரேடுகளையும் தயாரிக்க முடியும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது. உருக்காலையில் தயாரான பாகங்களை கொண்ட இன்ஜின், நாளை, விண்ணில் பாய உள்ள, 'சந்திராயன் - 2' ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், விண்வெளி பயணத்துக்கு தேவையான, ஐந்து இன்ஜின்கள், உருக்காலை தகடுகளால் உருவாக்கப்பட்டுள்ளன. வரும் நாட்களில், விண்வெளி வாகனங்களுக்கு, ஸ்டெயின்லெஸ் ஸ்டீலை, சேலம் உருக்காலையால் தயாரிக்க முடியும். இத்தகவலை, உருக்காலை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X