ஆவண எழுத்தர்கள் நலநிதியம் செயல்படுத்த வேண்டும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'ஆவண எழுத்தர்கள் நலநிதியம் செயல்படுத்த வேண்டும்'

Added : ஜூலை 14, 2019

வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடியில், தமிழ்நாடு பத்திரம் மற்றும் நகல் எழுதுவோர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம், மாநில தலைவர் பத்மநாபன் தலைமையில் நடந்தது. மாநில பொதுச் செயலாளர் மதுரை கண்ணன், ஆண்டறிக்கை வாசித்தார். சங்கத்துக்கு புதிதாக வடிவமைத்த 'லேகோ'வை அறிமுகப்படுத்தினர். மாநில தலைவர் பத்மநாபன், பொதுச் செயலாளர் மதுரை கண்ணன் ஆகியோர், நிருபர்களிடம் கூறியதாவது: ஆவண எழுத்தர்கள் நலநிதியம் அறிவித்தபோதும், இதுநாள் வரை செயல்படுத்தாமல் தாமதம் செய்து வருகிறது. நலநிதியத்தை ஏற்படுத்திக் கொடுக்க, முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆவண எழுத்தர்களுக்கு, தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ள எழுத்துக் கூலி, 50 முதல், 500 ரூபாய் என்பது குறைவாக உள்ளது. அதை , 500 முதல், 7,500 ரூபாய் என, நிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வாறு கூறினர். மாநில தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளராக, மதுரை கண்ணன், பொருளாளராக கோவிந்தராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X