பொது செய்தி

தமிழ்நாடு

வேலூர் தொகுதிக்கு கூடுதலாக 72 பறக்கும் படைகள் அமைப்பு

Added : ஜூலை 14, 2019
Advertisement

வேலூர்: வேலூர் லோக்சபா தொகுதிக்கு கூடுதலாக, 72 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வேலூர் லோக்சபாவுக்கு ஆக.,5ல் தேர்தல் நடக்கிறது. தேர்தலில் பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க, 18 பறக்கும் படை, 18 நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே தற்போது, ஒரே ஒரு லோக்சபா தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடப்பதால், அதிகளவு பணம் புழக்கம் இருக்கும் என, உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், கூடுதலாக, 72 பறக்கும் படைகள் அமைக்க, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, வேலூர் லோக்சபா தொகுதி தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது: கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் வரும், 20ல் முதல் பிரசாரத்தை தீவிரப்படுத்த உள்ளனர். இதற்காக, அமைச்சர்கள், முன்னாள், இன்னாள் எம்.எல்.ஏ., எம்.பி.,க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் என, பலரும் வர உள்ளனர். இதனால் தேர்தல் விதிமீறல்கள் நடக்க வாய்ப்புக்கள் அதிகமுள்ளது. இதை தடுக்க, ஏற்கனவே அமைக்கப்பட்ட, 36 குழுக்களை தவிர மேலும், 72 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு சட்டசபை தொகுதிக்கு, 12 குழுக்கள் வீதம், இவர்கள், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செயல்படுவர். மொத்தம், 108 குழுக்கள் உள்ளன. இவர்கள், செல்லும் வாகனங்களுக்கு ஜி.பி.ஆர்.எஸ்., கருவி பொருத்தப்பட்டுள்ளன. இதனால், இந்த குழுவினர் ஒரே இடத்தில் வாகன சோதனை செய்கின்றார்களா, அல்லது இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு செல்கிறார்களா என்பதை கலெக்டர் அலுலகத்தில் உள்ள, தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X