பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தலில் டெபாசிட் பணம் கட்ட காலி மதுபாட்டில்களை சேகரிக்கும் வேட்பாளர்

Added : ஜூலை 14, 2019 | கருத்துகள் (2)
Advertisement

வேலூர்: தேர்தலில் போட்டியிட டெபாசிட் தொகை கட்ட, காலி மது பாட்டில்களை, வேட்பாளர் ஒருவர் சேகரித்து வருகிறார்.


சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் செல்லப்பாண்டியன், 52; இவர், தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க தலைவராக உள்ளார். ஆக.,5ல் நடக்கும், வேலூர் லோக்சபா தேர்தலில் சுயே.,யாக போட்டியிடுகிறார். இதற்கான, டெபாசிட் தொகை கட்ட, வேலூரில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு சென்று, அங்குள்ள காலி மது பாட்டிகளை சேகரிக்கிறார்.

இது குறித்து அவர் கூறியதாவது: டாஸ்மாக் கடைகளில் வரும் வருமானத்தை கொண்டு தான், இந்த அரசே நடக்கிறது. ஆனால், ஆட்சியாளர்கள் மது குடிக்க வருபவர்களுக்கு, எந்த வசதியும் செய்வதில்லை. குடித்து, குடித்தே செத்து போகின்றனர். இதை தடுக்க, டாஸ்மாக் கடைகளில் மது குடிப்பவர்களுக்கு, இலவச இன்சூரன்ஸ் வசதி செய்ய வேண்டும். மது போதை மறு வாழ்வு மையங்களை மத்திய அரசு நடத்த வேண்டும். குடிகாரர்களால் தான் அரசாங்கமே நடப்பதால், அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும். டாஸ்மாக் கடையில் குடிக்க வருவோருக்கு, இலவச உணவு வழங்க வேண்டும். இது போல, ஏராளமான திட்டங்களை, என்னை வெற்றி பெற செய்தால் செயல்படுத்துவேன். வேலூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட, டெபாசிட் கட்டுவதற்கு என்னிடம் பணம் இல்லை. இதனால், டாஸ்மாக் கடை அருகே குடிமகன்கள் வீசி எறியும், காலி மதுபாட்டில்களை சேகரித்து விற்று, அதன் மூலம் பணம் சேகரித்து வருகிறேன். குடிகாரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மட்டும், எனக்கு ஓட்டு போட்டால், வெற்றி பெற்று விடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஜூலை-201913:17:50 IST Report Abuse
ருத்ரா விழிப்புணர்வு தலைவர்.நல்ல விஷயம். அதே நேரம் மது குடிப்பவருக்கு உணவு தர வேண்டும். இன்ஷ்யூரன்ஸ் தருவாராம். முரண்பாடு அதிம் தெரிகிறது. காலி பாட்டிலால் டெபாஸிட் கட்டி full பாட்டிலாக திருப்பி தருவாரா. சத்தியமா ஒண்ணும் புரியல. டாஸ்மாக் கை ஆதரிக்கிறாரா தப்பு என்று விழிப்புணர்வு தருகிறாரா?
Rate this:
Share this comment
Cancel
14-ஜூலை-201912:13:24 IST Report Abuse
bugindia அப்படியா... பேஷா சென்சிட்டா போச்சு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X