பொது செய்தி

தமிழ்நாடு

தபால் துறை தேர்வு; 989 பேர் பங்கேற்பு

Updated : ஜூலை 14, 2019 | Added : ஜூலை 14, 2019 | கருத்துகள் (7)
Advertisement

சென்னை : தமிழகத்தில் சர்ச்சைக்குள்ளான தபால் துறை தேர்வு தொடங்கி, நடந்து வருகிறது.இந்திய தபால்துறை சார்பில், தபால்துறை உதவியாளர், வகைப்படுத்துநர் உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு இன்று அறிவிக்கப்பட்டிருந்தது.







4 இடங்களில் தேர்வு


தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய 4 இடங்களில் இந்த தேர்வு நடக்கிறது. இதில், மொத்தம் 1039 பணியிடங்களுக்கு 989 பேர் தமிழகத்தில் தேர்வெழுதினர்.







மொழி சர்ச்சை :


சென்னை கோடம்பாக்கத்தில் இத்தேர்வை 150 பேர் எழுதினர். இதனை ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய 2 மொழிகளில் தான் எழுதவேண்டும் என்று தபால்துறை உத்தரவிட்டதால், சர்ச்சை எழுந்தது. தமிழிலும் தேர்வெழுத கடைசி நேரத்தில் வாய்ப்பின்றி போய் விட்டதாக அரசியல் கட்சிகள் சில குற்றம் சாட்டியுள்ளன.






முடிவு வெளியிட தடை :


நேற்று மதுரை ஐகோர்ட் கிளைமுன்பு போடப்பட்ட வழக்கு ஒன்றில், தபால் துறை தேர்வை நடத்த தடையில்லை என்றும் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைக்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஜூலை-201919:58:58 IST Report Abuse
ஆப்பு போகாத ஊருக்கு ரயில். அதில் 989 பேர் பயணம். பத்திரமா திரும்ப கொண்டுவந்து இறக்கிருவாங்க.
Rate this:
Share this comment
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
14-ஜூலை-201915:24:04 IST Report Abuse
J.Isaac மொத்தத்தில் தமிழ் நாட்டை சீரழித்து விடுவார்கள் . பாவம் நம் வருங்கால சந்ததியர் .
Rate this:
Share this comment
Cancel
Balaji - Chennai,இந்தியா
14-ஜூலை-201912:17:45 IST Report Abuse
Balaji இந்த செய்தில சாரம் இருக்கறதாவே தெரியல. விண்ணப்பம் செய்தவர்கள் ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் எழுதுவதாக முதலிலேயே விண்ணப்பித்திருக்கும் பட்சத்தில் இந்த முறை தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி யில் மட்டும் நடைபெறும் என்று ஒரு வேளை இருந்திருக்கலாம். திரித்து பேனை பெருமாள் ஆக்கிய கதையோ?
Rate this:
Share this comment
Dalda - Varanasi,இந்தியா
14-ஜூலை-201914:13:16 IST Report Abuse
Daldaநாடு முழுவதும் நடத்தப்பட்டு வந்த தபால் துறையின் தேர்வுகளில், வினாத்தாள்கள் அந்தந்த மாநில மொழிகளிலும் வழங்கப்பட்டு வந்தன. பல ஆண்டுகளாக இருந்து வந்த இந்த நடைமுறையை தற்போது மத்திய அரசு மாற்றியுள்ளது. இது நேற்றைய செய்தி கட் அண்ட் பேஸ்ட் செய்யப் பட்டுள்ளது க்ரூப் 4 வேலைக்கு பத்து லக்ஷம் பேர் விண்ணப்பித்திருக்கும் நிலையில் இங்கே ஒரு ஆயிரம்பேர் கூட இல்லையே என்ன காரணம்? "ஒரு வேளை அப்படியும் இருந்திருக்கலாம்" என்று யாரும் சந்தேகிக்கலாம் முழு பூசணிக்காயை இலை சோற்றில் மறைக்கும் கதையா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X