தபால் துறை தேர்வு; 989 பேர் பங்கேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தபால் துறை தேர்வு; 989 பேர் பங்கேற்பு

Updated : ஜூலை 14, 2019 | Added : ஜூலை 14, 2019 | கருத்துகள் (7)

சென்னை : தமிழகத்தில் சர்ச்சைக்குள்ளான தபால் துறை தேர்வு தொடங்கி, நடந்து வருகிறது.இந்திய தபால்துறை சார்பில், தபால்துறை உதவியாளர், வகைப்படுத்துநர் உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு இன்று அறிவிக்கப்பட்டிருந்தது.







4 இடங்களில் தேர்வு


தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய 4 இடங்களில் இந்த தேர்வு நடக்கிறது. இதில், மொத்தம் 1039 பணியிடங்களுக்கு 989 பேர் தமிழகத்தில் தேர்வெழுதினர்.







மொழி சர்ச்சை :


சென்னை கோடம்பாக்கத்தில் இத்தேர்வை 150 பேர் எழுதினர். இதனை ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய 2 மொழிகளில் தான் எழுதவேண்டும் என்று தபால்துறை உத்தரவிட்டதால், சர்ச்சை எழுந்தது. தமிழிலும் தேர்வெழுத கடைசி நேரத்தில் வாய்ப்பின்றி போய் விட்டதாக அரசியல் கட்சிகள் சில குற்றம் சாட்டியுள்ளன.






முடிவு வெளியிட தடை :


நேற்று மதுரை ஐகோர்ட் கிளைமுன்பு போடப்பட்ட வழக்கு ஒன்றில், தபால் துறை தேர்வை நடத்த தடையில்லை என்றும் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைக்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X