அரசியல் செய்தி

தமிழ்நாடு

வளர்ச்சி பாதையில் தமிழகம் ; வெங்கையா பெருமிதம்

Updated : ஜூலை 14, 2019 | Added : ஜூலை 14, 2019 | கருத்துகள் (32)
Advertisement

சென்னை : தமிழகம் வளர்ச்சியை நோக்கி முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது என்று இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பெருமிதத்துடன் தெரிவித்தார்.





சென்னை அமைந்தகரையில் அதிநவீன தொழில்நுட்பம் வசதிகளுடன் கூடிய எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையை துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், துணை முதல்வர் பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவமனை தலைவர் ராஜகோபாலன், இயக்குனர் பிரசாந்த் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய வெங்கையா கருணாநிதி முதல் ஜெயலலிதா எம்ஜிஆர் முதல் ரஜினி என சினிமா, அரசியல், மருத்துவம், கல்வி போன்ற அனைத்து துறையிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது என்றார்.



எம்.ஜி.ஆர் - ரஜினி வரை :



சென்னை அமைந்தகரையில் தனியார் மருத்துவமனை ஒன்றை திறந்து வைத்து, வெங்கையா நாயுடு பேசுகையில், '' தமிழக மக்களின் நிலமும் மனமும் செழிப்பாக உள்ளது. எம்ஜிஆர் முதல் ரஜினி, ஜெ., முதல் கருணாநிதி வரை சினிமா என்றாலும், விவசாயத்திலும் அனைத்து துறையிலும் சிறந்து விளங்குகிறது.


தமிழக தனிச்சிறப்பு :


கலை, இலக்கியம், கலாசாரம் மற்றும் வரலாறு என்று அனைத்திலும் தனிச்சிறப்பு கொண்டது தமிழ்நாடு. உலகம் முன்னேறிச்செல்லும் வேகத்திற்கு ஏற்ப நாமும் முன்னேறிச்செல்லவேண்டும்.






சுகாதார வளர்ச்சி :


நாட்டின் மருத்துவ வளர்ச்சியை காட்டிலும், தமிழகம் சுகாதாரத்துறையிலும் முன்னேறி உள்ளது. மக்கள் விழிப்புணர்வுடன் உள்ளதால், மக்களின் தேவையறிந்து அரசு செயல்பட வேண்டும்,'' என்றார்.

நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srivatsava -  ( Posted via: Dinamalar Android App )
15-ஜூலை-201909:19:04 IST Report Abuse
srivatsava எதுமே செய்யாம வெட்டியா பேசரது மட்டும் தான் நாங்க செஞ்சிகிட்டிருப்போம். அதைகேடடு ஓட்டும் எங்களுக்கு விழுந்து விடும். தெருஞ்சுக்கோங்க ஏமாளிகளே. இவண் BJP
Rate this:
Share this comment
Cancel
arudra1951 - Madurai,இந்தியா
15-ஜூலை-201906:37:44 IST Report Abuse
arudra1951 எங்கப்பன் குதிருக்குள் இல்லை .
Rate this:
Share this comment
Cancel
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
15-ஜூலை-201905:52:58 IST Report Abuse
Nepolian S செழிப்பா இருந்ததைதான் சிதைத்துக் கொண்டிருக்கிறீர்களே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X