கர்தார்பூர் தர்பார் சாஹிப் பேச்சில் முன்னேற்றம்

Updated : ஜூலை 14, 2019 | Added : ஜூலை 14, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுடில்லி: பாகிஸ்தானின் கர்தார்பூருக்கு, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலிருந்து சாலை அமைக்கும் திட்டம் தொடர்பாக இன்று (ஜூலை 15) இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடந்தது.



latest tamil news




குருநானக் ; தர்பார் சாஹிப் :


சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குருநானக் பாகிஸ்தானிலுள்ள கர்தார்பூரில் 18 ஆண்டுகள் வாழ்ந்தார். அவர் நினைவாக இந்திய எல்லையில் இருந்து 3 கி.மீ. தொலைவில் ராவி நதிக்கரையில் 'தர்பார் சாஹிப்' என்ற பெயரில் குருத்வாரா அமைக்கப்பட்டுள்ளது.


latest tamil news



கர்தார்பூருக்கு சீக்கியர்கள் விசா இன்றி புனிதப்பயணம் மேற்கொள்ள சாலை அமைக்க இந்தியாவின் குருதாஸ்பூரையும் கர்தார்பூரையும் இணைக்க திட்டமிடப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பரில் இருநாட்டு பகுதிகளிலும் இதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது.


latest tamil news




அட்டாரி - வாகா எல்லை


இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தரப்பில் குழு அமைக்கப்பட்டது. கடந்த ஏப்ரலில் நடைபெற இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இன்று இரு நாட்டு பிரதிநிதி குழுக்களும் இன்று அட்டாரி-வாகா எல்லைப் பகுதியில் பேச்சுவார்த்தை நடத்தினர்.


latest tamil news




இந்தியா-பாக் குழு :


இதில் இந்தியா சார்பில், உள்துறை இணை செயலாளர் எஸ்.சி.எல்.தாஸ்,, வெளியுறவுத்துறை இணைசெயலாளர் தீபக் மிட்டல் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் பங்கேற்றனர். பாகிஸ்தான் சார்பில் பங்கேற்ற 20 பேர் கொண்ட குழுவிற்கு பாக்.,வெளியுறவு செய்தித்தொடர்பாளர் முகமது ஃபைசல் தலைமை ஏற்றார்.


பாலம் கட்டுமானம் :


இதில், கர்தார் பூர் தர்பார் சாஹிப் குருத்வாராவில் 70 சதவீதமான கட்டுமான பணிகள் நிறைவடைந்துவிட்டன. இந்தியா அமைக்கும் பாலம் கட்டுமானப் பணிக்கான முழு ஒத்துழைப்பையும் அளிப்போம் என்று முகமது ஃபைசல் தெரிவித்தார்.

இந்தியா சார்பில், பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் இந்தியாவை நோக்கி வரும் ராவி ஆற்று உபரி வெள்ளநீர், பாலம் கட்டுமானப் பணிகள் குறித்து முக்கியமாக பேசப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.


பக்தர்களின் வசதி :


இதனிடையே, இந்தியா சார்பிலான கட்டுமானப் பணிகள் வரும் அக்டோபர் 31 க்குள்ளும், நெடுஞ்சாலை பணிகள் செப்டம்பர் 30 க்குள்ளும் முடிவடையும் என்றும், அதன் பின்னர் பஞ்சாப்பின் குர்தாஸ்பூரில் இருந்து எளிதாக பக்தர்கள் சென்றுவர முடியும் என்றும் உயரதிகாரிகள் கூறியுள்ளனர்.



முன்னேற்றம் :


பேச்சுவார்த்தைக்கு பின்னர், 80 சதவீத விசயங்களில் பரஸ்பர புரிந்துணர்வு இருந்தது என்றும், அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம் என்றும் பாகிஸ்தான் தரப்பில் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்திய தரப்பில், '' கர்தார்பூருக்கு பக்தர்களை அனுப்ப உள்ளோம். அங்கு இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை தடை செய்ய பாக்., சம்மதித்துள்ளது. அடுத்த கட்ட பேச்சில் உடன்பாட்டிற்கு வருவோம்,'' என்று கூறியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
14-ஜூலை-201916:44:37 IST Report Abuse
Nallavan Nallavan பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ?? பேச்சு வார்த்தையில் மணிசங்கர் அய்யரும், சிதம்பரமும் கலந்து கொள்ளவில்லை அல்லவா ?? அதனால்தான் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X