கமலின் இளைய மகள் என்ற அடையாளத்துடன் தமிழ், ஹிந்தி சினிமாக்களில் ஆஹா! என புகழும் அளவிற்கு நடித்து கலக்கும் அக்ஷரா ஹாசனுடன் தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக ஒரு நேர்காணல்...
* 'கடாரம் கொண்டான்' வாய்ப்பு எப்படி ?எங்கள் ராஜ்கமல் தயாரிப்பில் நடிப்பதில் சந்தோஷம். ஒரு நாள் ராஜ்கமலில் நடிப்பேன் என்ற கனவும் எனக்குள் இருந்தது. அது கடாரம் கொண்டான் படம் மூலம் நிறைவேறி உள்ளது. கமல் மகள் என்பதால் இந்த பட வாய்ப்பு கிடைக்கவில்லை. என் திறமைகளை பார்த்து தான் வாய்ப்பு தந்தார்கள்.
* படத்தில் உங்கள் கதாபாத்திரம் என்ன ?கர்ப்பிணியாக நடித்து இருக்கிறேன். எனக்கு இந்தப் படம் பெரிய அனுபவத்தை கொடுத்துள்ளது. ஜோடியாக நாசரின் மகன் அபி ஹாசன் நடித்து இருக்கிறார். இவரை தவிர விக்ரம் மற்றும் பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
* விக்ரம் உடன் நடித்த அனுபவம் ?விக்ரம் பழகுவதில் நல்ல பிரண்ட்லி. நடிப்புன்னு வந்துட்டா அந்த சீனுக்கு முன்னாடி அவ்வளவு சீரியஸா நடிக்கிறார். காட்சிகளை எப்படி உள் வாங்கி நடிப்பது என்பதை அவரிடம் கற்றுக் கொண்டேன்.
* படத்தில் நீங்களும் சண்டை போட்டீங்களா ?ஆமா அதுவும் கர்ப்பிணியா இருந்தும் கூட சண்டை காட்சிகளில் நடித்து இருக்கிறேன். எனக்கு சண்டை காட்சிகளில் நடிப்பது ரொம்ப இஷ்டம். சண்டைங்குறது சும்மா டிஷ்யூம் டிஷ்யூம்னு காமிக்கிறது கிடையாது. வெளிநாட்டு சண்டை பயிற்சியாளர் தான் சண்டை கற்றுக் கொடுத்தார்.
* சென்னை வாழ்க்கை, மும்பை வாழ்க்கை பற்றி?இரண்டு இடத்திலும் வீடு இருக்கு. சென்னை நான் பிறந்த ஊர் என்பதால் கொஞ்சம் ஸ்பெஷல். இது என் ஊர், என் வீடு என்ற உணர்வை தரும். சென்னையை எளிமையான வாழ்க்கைக்கான இடமாக பார்க்கிறேன்.
* அமிதாப் - ஷாருக்கான், அஜித்-, விஜய் இயக்குவீர்களா ?ஐயோ அது ரொம்ப கஷ்டமான விஷயம். இந்த நாலு பேருக்கும் சேர்ந்து ஒரு ஸ்கிரிப்ட் பண்ணினா சூப்பரா இருக்கும்னு நினைக்கிறேன். நல்ல ஐடியா கொடுத்து இருக்கீங்க; பார்க்கலாம்
* உங்கள் ரியல் கேரக்டர் எப்படி ?எப்பவுமே நான் ஜாலியா இருப்பேன். ஆனால் பயங்கர காமெடி பீஸ் நான். எல்லாரிடமும் ஈசியா பழகிடுவேன். அதே நேரம் ரொம்ப மரியாதையாக பழகுவேன்.
* இந்த தேர்தலில் அப்பா கட்சியின் ரிசல்ட் பற்றி?அப்பா அரசியலில் இவ்வளவு துாரம் வந்தது பெருமையாக இருக்கு; அவர் மேல நம்பிக்கை இருக்கு அரசியலில் இன்னும் மேல வருவார்.
* உடற்பயிற்சி பண்ணும் பழக்கம் இருக்கா ?சின்ன வயசில் இருந்தே வீட்டில் எல்லாருக்குமே அந்த பழக்கம் இருக்கு. ஆனால், எனக்கு புட்பால் விளையாடுவது, டான்ஸ் ஆடுவது தான் பிடிக்கும்.
* சினிமாவில் நடிக்க வாய்ப்பு வருதா?எனக்கு நடிக்க சான்ஸ் கிடைக்கல; அதான் உண்மை. இயக்குனர்கள் அவங்க படைக்கும் படைப்புகளில் என்னை அந்த கேரக்டரா பார்த்தா எனக்கு கண்டிப்பா வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்.
* அக்கா சுருதிக்கும் உங்களுக்குமான உறவு ?நாங்க ரெண்டு பேரும் அக்கா- தங்கச்சி கிடையாது. அண்ணன்- தம்பி மாதிரி. அடிக்கடி டிரஸ் விஷயத்தில் தான் சண்டை போடுவோம். எல்லா வீட்ல இருக்கிற மாதிரி தான் நாங்க ரெண்டு பேரும் அடிக்கடி அடிச்சுக்குவோம்.. ஜாலியா இருப்போம்.
* அப்பாவுடைய எந்த படங்கள் ரீமேக் பண்ணணும் ?ரீமேக் பண்ணினா அதனுடைய அழகு கெட்டுப் போய்விடும்னு நினைக்கிறேன். அப்பாவின் பல படங்கள் கிளாசிக். அதை தொட கூடாது. ஆனால் 'அவ்வை சண்முகி' ரீமேக் பண்ணா நல்லா இருக்கும்னு தோணுது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE