அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் சித்து

Updated : ஜூலை 14, 2019 | Added : ஜூலை 14, 2019 | கருத்துகள் (18)
Share
Advertisement
Navjot Sidhu, Punjab Minister, Tweets,Rahul, பஞ்சாப், சித்து, ராஜினாமா, அமரீந்தர் சிங், காங்கிரஸ், காங்.,

சண்டிகர்: இலாகா மாற்றப்பட்டதால் அதிருப்தியில் இருந்த பஞ்சாப் மாநில அமைச்சர் சித்து, தனது பதவியை ராஜினாமா செய்து, அந்த கடிதத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

பஞ்சாப்பில், மாநில முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் அமைச்சர் சித்து இடையே மோதல் நீடித்து வந்தது. லோக்சபா தேர்தலின் போது, தனது மனைவி நவ்ஜோத் கவுருக்கு சீட் கிடைப்பதை அமரீந்தர் சிங் தடுத்து விட்டதாக சித்து குற்றம்சாட்டினார்.


latest tamil news




இதற்கு பதிலடியாக, உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த சித்து, சரிவரி பணி செய்யாத காரணத்தினால், காரணத்தினால், நகர பகுதிகளில் காங்கிரசுக்கு அதிக ஓட்டு கிடைக்கவில்லை என முதல்வர் குற்றம்சாட்டினார். தொடர்ந்து, சித்து கவனித்து வந்த உள்ளாட்சி, சுற்றுலா மற்றும் கலாசார துறைகளை முதல்வர் பறித்தார். பதில், மின்சாரம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளை சித்துவிடம் வழங்கினார். இதனால், அதிருப்தி அடைந்த சித்து, இது குறித்து காங்கிரஸ் மேலிடத்திடம் புகார் அளித்தார். இருப்பினும், சித்து கேட்ட துறைகளை வழங்க அமரீந்தர் சிங் மறுத்துவிட்டார்.


latest tamil news




இந்நிலையில், சித்து தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், கடந்த ஜூன் 10ம் தேதியிடப்பட்ட எனது ராஜினாமா கடிதம் காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது எனக்கூறியுள்ளார்.



மற்றொரு டுவிட்டில், எனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கு விரைவில் அனுப்புவேன் எனக்கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pannadai Pandian - wuxi,சீனா
15-ஜூலை-201910:12:07 IST Report Abuse
Pannadai Pandian அம்ரிந்தர் சிங் நல்ல மனிதர். தீவிரவாதத்துக்கு எதிரானவர். அந்தோனியோ மைனோ குடும்பத்துக்கு பிடிக்காது. ஆனால் சித்து பதவி வெறி பிடித்தவர். பஞ்சாபில் நடக்கும் பவர் பாலிடிக்ஸுக்கு காரணம் ராகுல் குடும்பம். அவர்களுக்கு தேவை ஒரு ... பொருத்தமானவர் சித்து….அம்ரிந்தர்பாஜகவுக்கு தாவினாலும் ஆச்சர்யம் இல்லை, காரணம் அவரது குடும்பம் ஒரு தேச பக்தர்கள் நிறைந்த குடும்பம்…...தற்போது அவர் இருப்பது கரையான் பொந்தில்…..
Rate this:
Cancel
Viswam - Mumbai,இந்தியா
15-ஜூலை-201909:38:32 IST Report Abuse
Viswam ஐயையோ இனிமே கண்டமேனிக்கு டிவியில் கன்னாபின்னா ப்ரோக்ராமில் ஜட்ஜ் ஆக வந்து கெக்கபிக்கே என்று பினாத்தி நம்மளையெல்லாம் சாவடிக்கப்போகிறாரா? கடவுளே, தேவுடா இவன் தொண்டையை சுவிட்ச் ஆப் செஞ்சுடு
Rate this:
Cancel
முகுந்தன் - குழித்துறை ,இந்தியா
15-ஜூலை-201909:25:26 IST Report Abuse
முகுந்தன் இதுவும் பி.ஜே.பி. கட்சியினுடைய வேலை தான் என்று சொல்ல யாரையும் காணோம்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X