துப்பாக்கி ஒப்படைப்பு: நியூசிலாந்தில் தீவிரம்

Added : ஜூலை 14, 2019
Advertisement



கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்து நாட்டில், இரண்டு மசூதிகளுக்குள், சமீபத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில், 51 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை அடுத்து, நாடு முழுவதும் துப்பாக்கி உரிமம் பெற்ற வர்கள், தங்கள் ஆயுதங்களை ஒப்படைக்கும் திட்டத்தை, அரசு அறிவித்தது. இதற்கு, ஆறு மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு பிறகும், ஆயுதங்களை தங்கள் வசம் வைத்திருப்போருக்கு, சிறை தண்டனை வழங்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து, ஏராளமான மக்கள், தங்களிடம் இருந்த உரிமம் பெற்ற துப்பாக்கிகளை, அரசிடம் நேற்று ஒப்படைத்தனர். இதற்கு, அரசு சார்பில் இழப்பீடு வழங்கப்படுகிறது. கிறைஸ்ட்சர்ச்சில் மட்டும், இதுவரை, 250 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டன. 2 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப் பட்டு உள்ளதாக, அரசு அறிவித்துஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X