மலேஷிய தீவில் சுற்றுலா பயணி பலி| Dinamalar

மலேஷிய தீவில் சுற்றுலா பயணி பலி

Added : ஜூலை 14, 2019


கோலாலம்பூர்: ஆசிய நாடான, மலேஷியாவில் உள்ள, போர்னியோ தீவில், முலு தேசிய வனவிலங்கு சரணாலயம் உள்ளது. இங்கு, சுற்றுலா பயணியர் சிலர், சமீபத்தில் வந்தனர். அப்போது ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில், ஐரோப்பிய நாடான நெதர்லாந்தைச் சேர்ந்த, பீட்டர் ஹான்ஸ் என்ற சுற்றுலா பயணி, அடித்து செல்லப்பட்டார். அவரது உடலை, மீட்பு படையினர், நேற்று மீட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X