கட்டாய ஓட்டு ; என்ன செய்வார் மோடி?

Updated : ஜூலை 14, 2019 | Added : ஜூலை 14, 2019 | கருத்துகள் (31)
Advertisement

புதுடில்லி : கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே, ஒட்டுப்போடுவதை கட்டாயமாக்க முயற்சித்த பிரதமர் மோடி, தற்போது அசைக்க முடியாத பிரதமராக உள்ள நிலையில் என்ன செய்வார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.








தனி நபர் மசோதா :


தேர்தல்களில் ஓட்டு போடுவதை கட்டாயமாக்கக்கோரி, பா.ஜனதா உறுப்பினர் ஜனார்த்தன் சிங் சிக்ரிவால் லோக்சபாவில் தனி நபர் மசோதா தாக்கல் செய்துள்ளார். இந்த மசோதா மீது நேற்று முன்தினம் விவாதம் நடைபெற்றது. அப்போது, சக பா.ஜனதா உறுப்பினர்களான அஜய் டேனி மிஸ்ரா, நிஷிகாந்த் துபே, பிஜு ஜனதாதள உறுப்பினர் பார்த்ருஹரி மகதாப் ஆகியோர் மசோதாவுக்கு எதிராக பேசினர். இந்த விவாதம் இனிவரும் நாட்களிலும் தொடர உள்ளது.







குஜராத்தில் கட்டாய ஓட்டு :


இதற்கிடையே, பிரதமர் மோடி, 9 ஆண்டுகளுக்கு முன்பே, ஓட்டு போடுவதை கட்டாயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அவர் குஜராத் முதல்வராக இருந்தபோது, கடந்த 2010-ம் ஆண்டு, அம்மாநில உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போடுவதை கட்டாயமாக்க திட்டமிட்டார்.


கவர்னர் முட்டுக்கட்டை :


ஆனால், அப்போது குஜராத் கவர்னரான கமலா பேனிவால், அம்முயற்சியை கடுமையாக எதிர்த்தார். கருத்துரிமையையும், ஓட்டு போடாமல் இருக்கும் உரிமையையும் அளிக்கும் அரசியல் சட்டத்தின் 19(1)(ஏ)-வது பிரிவை மீறும்வகையில் இந்த முயற்சி இருப்பதாக கூறி, அவர் முட்டுக்கட்டை போட்டார். இதனால் மோடியால் அதை செயல்படுத்த முடியவில்லை.


ஆனந்திபென் பட்டேல் :

அவர் பிரதமரான பிறகு, குஜராத் முதல்வராக ஆனந்திபென் பட்டேல் பொறுப்பேற்றார். அவர் மோடியின் முயற்சியை கையில் எடுத்தார். அதன்பலனாக, ஓட்டு போடுவதை கட்டாயமாக்கும் மசோதா, குஜராத் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.


ஐகோர்ட் தடை :


மோடி அரசால் நியமிக்கப்பட்ட கவர்னர் ஓ.பி.கோலி, ஒப்புதல் அளித்ததால், அந்த மசோதா சட்டமானது. இந்தவகையில், உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போடுவதை கட்டாயமாக்கிய முதல் மாநிலம் என்ற பெயரை குஜராத் பெற்றது.இருப்பினும், குஜராத் ஐகோர்ட் அந்த சட்டத்தை அமல்படுத்த இடைக்கால தடை விதித்துள்ளதால், இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை.







என்ன செய்வார் மோடி?


இப்போது லோக்சபாவில் தனிநபர் மசோதா மூலம் அப்படி ஓர் வாய்ப்பு, அதாவது மீண்டும் நாடுமுழுவதும் ஓட்டளிப்பதை கட்டாயமாக்கும் வகையில், தனிநபர் மசோதா நிறைவேறி சட்டம் ஆகுமா, மோடி இதில் என்ன முடிவெடுப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
15-ஜூலை-201919:56:52 IST Report Abuse
r.sundaram ஓட்டுபோடுவதை கட்டாயமாக்கினால் தவறில்லை. ஓட்டுப்போட விருப்பமில்லாதவர்களுக்குத்தான் நோட்டோ உள்ளதே.
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
15-ஜூலை-201916:44:47 IST Report Abuse
ஜெயந்தன் எல்லாரும் வாக்களிக்க வேண்டும் என்று சொல்ல எந்த அரசியல் வியாதிக்கும் தகுதி கிடையாது..அதை விட..தேர்தல் ஆணையத்திற்கு எள்ளளவும் தகுதி கிடையாது......
Rate this:
Share this comment
Cancel
பொன் வண்ணன் - chennai,இந்தியா
15-ஜூலை-201911:16:24 IST Report Abuse
பொன் வண்ணன் கையாலா ஆகாத தேர்தல் ஆணையத்தின் அடாவடித்தனங்களுக்கு முதலில் முற்று புள்ளி வைப்பார்களா?? இப்போது நடந்த பாராளு மன்றத் தேர்தல் தான் சுதந்திர இந்தியாவில் அதிக அளவில் முறைகேடுகள் நடந்த தேர்தல் என்பது உண்மைதானே. மொத இந்தியாவிலும் ஏழு கோடிக்கும் மேல் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப் பட்டது எப்படி..தமிழ் நாட்டிலேயே கன்யாகுமரியில் இது நடந்ததே... நீதி மன்றம் ஏன் இதை தானே முன்வந்து விசாரிக்கக் கூடாது ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X