அதிருப்தி எம்எல்ஏக்கள் நிபந்தனை: நிறைவேற்ற காங்., உறுதி

Updated : ஜூலை 14, 2019 | Added : ஜூலை 14, 2019 | கருத்துகள் (14)
Advertisement
Karnataka crisis, DK Shivakumar, Congress, rebel MLAs, கர்நாடகா, அதிருப்தி எம்எல்ஏ, நிபந்தனை, சிவக்குமார்

பெங்களூரு: அதிருப்தி காரணமாக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தவர்களின் எந்தவிதமான நிபந்தனையையும் நிறைவேற்ற காங்கிரஸ் மேலிடம் விரும்புவதாக, அக்கட்சியை சேர்ந்த கர்நாடக அமைச்சர் டிகே சிவக்குமார் கூறியுள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் 13 மற்றும் மஜதவின் 3 என 16 எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளனர். அவர்கள் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர். ராஜினாமா செய்தவர்களில் 10 பேர் தங்கள் கடிதங்களை சபாநாயகர் ரமேஷ்குமார் தாமதபடுத்துவதாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். சபாநாயகர் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், வரும் 16 வரை எம்.எல்.ஏ.,க்களின் ராஜினாமா கடிதங்கள் மீதும், தகுதி நீக்கம் மனு மீதும்,சபாநாயகர் எந்தவிதமான நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.






இந்நிலையில், கர்நாடக அமைச்சரும், காங்கிரஸ் கட்சி முக்கிய நிர்வாகியான டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், அதிருப்தி எம்எல்ஏ.,க்களின் நிபந்தனையை நிறைவேற்ற காங்கிரஸ் மேலிடம் தயாராக உள்ளது. அரசை அவர்கள் காப்பார்கள் என்ற தகவல்கள் வருகின்றன. காங்கிரஸ் சார்பில் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பிற்கு எதிராக அவர்கள் ஓட்டு போட்டால், பதவி பறிபோகும். எங்கள் எம்.எல்.ஏ.,க்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. அவர்கள் காங்கிரஸ் சார்பில் தேர்வு செய்யப்பட்டவர்கள். நீண்ட காலம் காங்கிரசில் பணியாற்றியுள்ளனர். அவர்களின் கருத்துகளை திறந்த மனதுடன் நாங்கள் கேட்போம். அவர்கள் எங்களது நண்பர்கள். மீண்டும் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.




Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
15-ஜூலை-201909:28:18 IST Report Abuse
மலரின் மகள் கர்நாடக சட்டசபை கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டு புதிய சட்டசபை வரவேண்டும். ராஜினாமா செய்தவர்கள் எதிர்வரும் தேர்தலில் நிற்பதற்கு அனுமதி இருக்க கூடாது. சுய விருப்பின் அடிப்படையில் ராஜினாமா செய்தவர்கள் எங்கே இனி மக்கள் பனி செய்ய போகிறார்கள் அவர்கள்? ராஜினாமா செய்த எம் எல் எ களுக்கு தெரியாதா தங்களின் ராஜினாமாவால் விளையும் வினை என்னவாக இருக்கும் என்று? ஒருவிதத்தில் அரசை மிரட்டுவது போலத்தான் இது தெரிகிறது. எதிர்க்கட்சி செய்வதும் சரியல்ல? யாருக்கும் அங்கே பொறுப்பிருப்பதாக தெரியவில்லை. ராஜினாமா செய்தவர்களை சமாதானப்படுத்தி விடலாம் என்று வைத்து கொண்டாலும் அதையே ஒரு உதாரணமாக வைத்து கொண்டு மற்ற உறுப்பினர்கள் அதே சலுகையை கேட்டால் நிரைவேற்ற முடியுமா? யாருக்கும் ஆதரவு இல்லாத நிலையில் திரு குமாரசாமி அவர்கள் முதல்வராக ஆசை பட்டதன் விளைவாகத்தான் இது தெரிகிறது. ஜனாதிபதி ஆட்சி ஆறுமாதங்களுக்கு தொடர்ந்து அந்த கட்டத்தில் தேர்தல் நடத்த வேண்டும் அதுவே சரியாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Ambika. K - bangalore,இந்தியா
14-ஜூலை-201921:49:38 IST Report Abuse
Ambika. K ஆட்டைய போடறத விட அதை காப்பாத்தறது பெரிய கஷ்டமா பூடுச்சு
Rate this:
Share this comment
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
14-ஜூலை-201920:45:59 IST Report Abuse
r.sundaram எம் எல் ஏ ஒருவர் எனக்கு நாலு பெண்டாட்டி வேண்டும் என்றாலும் ஏற்பாடு செய்வார்கள் போலிருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X