இமாச்சலில் கட்டடம் இடிந்து இருவர் பலி; 14 பேர் கதி என்ன?

Updated : ஜூலை 14, 2019 | Added : ஜூலை 14, 2019
Advertisement
இமாச்சல்,  கெஸ்ட் ஹவுஸ், இடிந்தது

சோலன்: இமாச்சல பிரதேச மாநிலம் சோலன் மாவட்டம், குமர்ஹட்டியில் உணவக கட்டடம் இடிந்து விழுந்தது. கனமழையினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இடிந்தது. அப்போது, அந்த கட்டடத்தில், 30 ராணுவ வீரர்கள், 7 பொது மக்கள் இருந்தனர். தகவல் அறிந்த தேசிய மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 18 ராணுவ வீரர்களையும், 5 பொது மக்களையும் அவர்கள் மீட்டனர். 2 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டன. மேலும் 14 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.






இந்த சம்பவம் தொடர்பாக முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் கூறுகையில், கடைசியாக கிடைத்த தகவல்படி, 23 பேர் மீட்கப்பட்டனர். ராணுவ ஜவான் உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவ இடத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் மருத்துவ குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்பு பணிகள் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கிறேன். இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் . இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X