அதிக ரன்கள்: நியூசி., கேப்டன் சாதனை

Updated : ஜூலை 14, 2019 | Added : ஜூலை 14, 2019
Advertisement
CWC19Final, ENGvsNZ, BackTheBlackCaps, Nicholls, KaneWilliamson, Guptill, Dharmasena, Plunkett, உலக கோப்பை, நியூசிலாந்து, இங்கிலாந்து, நிக்கோலஸ்

லண்டன்: உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த கேப்டன் என்ற சாதனையை நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் படைத்துள்ளார். அவர், 10 இன்னிங்சில் 578 ரன்கள் எடுத்துள்ளார்.

லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் உலக கோப்பை பைனலில் டாஸ் வென்று நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. இதில் அந்த அணி கேப்டன் வில்லியம்சன் 30 ரன்னில் அவுட்டானார். நடப்பு உலக கோப்பை தொடரில் மொத்தம் 578 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம், ஒரு உலக கோப்பை தொடரில், அதிக ரன் குவித்த கேப்டன் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அவர் 10 இன்னிங்சில் இந்த சாதனையை படைத்துள்ளார்






வில்லியம்சனுக்கு அடுத்த இடங்களில், இலங்கையின் ஜெயவர்தனே , 2007 ல் 11 இன்னிங்சில் 548 ரன்களும், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், 2007 ல், 9 இன்னிங்சில், 539 ரன்களும்,ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச், நடப்பு உலக கோப்பை தொடரில் 10 இன்னிங்சில் 507 ரன்களும், தென் ஆப்ரிக்காவின் ஏ பி டிவில்லியர்ஸ் 2015 ல் 7 இன்னிங்சில் 482 ரன்களும் குவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X