சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேப்பந்தட்டை அருகே மின்னல் தாக்கி பெண் பலி

Added : ஜூலை 14, 2019
Advertisement

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பசும்பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி. இவரது மனைவி செல்வி (வயது 45). இவர்களுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இன்று(ஜூலை 14) மதியம் செல்வி தனது வயலுக்கு விவசாய வேலைக்காக சென்றுள்ளார். அப்போது கருமேகம் சூழ்ந்து பலத்த சத்தத்துடன் இடி இடித்து மழை பெய்தது. அப்போது மழையில் நனையாமல் இருக்க செல்வி அருகே இருந்த மரத்தின் அடியில் ஒதுங்கி நின்று உள்ளார். அப்போது திடீரென பலத்த சத்தத்துடன் மின்னல் தாக்கியதில் செல்வி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விகளத்தூர் போலீசார் செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X