இங்கிலாந்து அணிக்கு 242 ரன்கள் இலக்கு

Updated : ஜூலை 14, 2019 | Added : ஜூலை 14, 2019
Advertisement
CWC19Final, ENGvsNZ, BackTheBlackCaps, Nicholls, KaneWilliamson, Guptill, Dharmasena, Plunkett, உலக கோப்பை, நியூசிலாந்து, இங்கிலாந்து, நிக்கோலஸ்

லண்டன்: நியூசிலாந்துக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் பைனலில் இங்கிலாந்து அணிக்கு 242 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. லண்டன் லார்ட்சில் நடக்கும் பைனலில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி புதிய சாம்பியனாக வலம் வரலாம். 'டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். இரு அணிகளிலும் மாற்றம் செய்யப்படவில்லை.


நிக்கோல்ஸ் அரை சதம்


நியூசிலாந்து அணிக்கு கப்டில், நிக்கோல்ஸ் ஜோடி துவக்கம் தந்தது. கப்டில் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். நிக்கோல்ஸ், கேப்டன் வில்லியம்சன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிளங்கட் பந்தில் வில்லியம்சன் (30) ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய நிக்கோல்ஸ் (55) அரை சதம் கடந்தார். மார்க் உட் 'வேகத்தில்' ராஸ் டெய்லர் (15) சிக்கினார். நீசம் (19), கிராண்ட்ஹோம் (16) நிலைக்கவில்லை. லதாம் (47) அரை சத வாய்ப்பை இழந்தார். நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 241 ரன்கள் எடுத்தது. சான்ட்னர் (5), பவுல்ட் (1) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக வோக்ஸ், பிளங்கட் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.




Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X