இருளில் மூழ்கிய நியூயார்க் நகரம்

Added : ஜூலை 14, 2019 | கருத்துகள் (10)
Advertisement
 நியூயார்க் , தீ விபத்து ,மின் தடை,மின் இணைப்பு

நியூயார்க் : அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஏற்பட்ட மின்தடை பல மணி நேரங்களுக்கு பிறகு சீரமைக்கப்பட்டது.

நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியில் சனிக்கிழமை மாலை ஏற்பட்ட மின்தடையால் 73 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் மற்றும் தொழில்கள் பாதிக்கப்பட்டன. மின்தடையினால் புகழ்பெற்ற டைம்ஸ் ஸ்கொயர், சுரங்க பாதைகள் உள்ளிட்ட பகுதிகள் இருளில் மூழ்கின. பாதுகாப்பு காரணமாக சுரங்க பாதைகளை பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மின் தடை ஏற்பட்டதால் பலர் இரவில் சாலைகளில் கூட்டம் கூட்டமாக நடந்து சென்றனர். மின்தடை ஏற்பட்ட போது நியூயார்க்கில் உள்ள புகழ்பெற்ற Carnegie ஹாலில் கச்சேரி நடத்திக்கொண்டு இருந்த குழுவினர் வெளியே வந்து பொது மக்கள் மத்தியில் கச்சேரியை தொடர்ந்தனர்.

மின்மாற்றியில் ஏற்பட்ட தீ விபத்து தான் மின் தடைக்கு காரணம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நள்ளிரவு முதல் படிபடியாக மின்சார இணைப்பு சீரமைக்கப்பட்டது. மின் இணைப்பு சீரானதை சாலைகளில் இருந்த மக்கள் கூச்சலிட்டு கொண்டாடி வரவேற்றனர். கடந்த ஆயிரத்து 970ஆம் ஆண்டு நியூயார்க்கில் 25 மணி நேர மின் தடை ஏற்பட்டது. அந்த சம்பவம் நடைபெற்று சரியாக 42 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு மீண்டும் நீண்ட நேரம் மின்தடை ஏற்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayanantham - tamilnaadu ,இந்தியா
17-ஜூலை-201904:50:52 IST Report Abuse
jayanantham 1977 ஜூலை 13 , 14 இரண்டு நாட்களில், ஏற்பட்ட 2 கடும் மின்னல் தாக்குதல்கள் காரணமாக மின்தடை ஏற்பட்டு நியூயார்க் நகரம் இருளில் மூழ்கியது. அது சமயம், சுமார் 26 மணி நேரத்திற்கும் மேலாக கடைகள் கொள்ளை, கற்பழிப்பு போன்றவை நிகழ்ந்து, பலர் பணக்காரர்கள் ஆனார்கள். அடுத்த 10 மாத காலங்களில் அப்பா பெயர் தெரியாத குழந்தைகள் பல பிறந்தன என்பது செய்தி.
Rate this:
Share this comment
Cancel
venkatan - Puducherry,இந்தியா
15-ஜூலை-201920:14:11 IST Report Abuse
venkatan அதனால் இந்தியாவும் அமெரிக்கா ஆயிடுச்சி..சூப்பர் பவர்ல சேந்துரும்.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
15-ஜூலை-201907:29:10 IST Report Abuse
ஆரூர் ரங் ஒருவேளை ஆற்காட்டார் அங்கு சுற்றுப்பயணம் போய்க்கொண்டிருக்கிறாரோ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X