சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'மாஜி' அதிகாரி வீட்டில் 100 சவரன் கொள்ளை

Added : ஜூலை 14, 2019 | கருத்துகள் (1)
Advertisement

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே, பி.எஸ்.என்.எல், முன்னாள் அதிகாரி வீட்டில், 100 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம், வடக்கன்குளத்தைச் சேர்ந்தவர் பாலன், 65. பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில், அதிகாரியாக பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர். இவர், இரு தினங்களுக்கு முன், இளைய மகனுடன், நாகர்கோவிலில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார்.
பூட்டி கிடந்த வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நேற்று முன்தினம் நள்ளிரவில், வீட்டின் முன்பக்க கதவை உடைத்து, வீட்டிற்குள் சென்றுள்ளனர். அங்கு, பீரோவை உடைத்து, தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

நேற்று காலை வீட்டிற்கு வந்த பாலன், வீடு திறந்து கிடப்பதை பார்த்து, அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் இருந்த, 100 சவரன் நகைகள் மாயமாகியிருந்தன. அவரது புகாரின்படி, பணகுடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. SIVAKUMAR - chennai,இந்தியா
15-ஜூலை-201915:28:32 IST Report Abuse
S. SIVAKUMAR அவங்க கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணமா இருக்காது , அப்படின்னா இப்படி அஜாக்கிரதையா விட்டுட்டு போவாங்களா. அம்பை மட்டும் தேடாமல் எய்தவர்களையும் தேடினால் மட்டுமே குற்றம் தடுக்க படும். இல்லையென்றால் குற்றம் தொடரும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X