பொது செய்தி

இந்தியா

அனைவருக்கும் குடிநீர் திட்டம்: ரூ. 6.3 லட்சம் கோடி முதலீடு

Updated : ஜூலை 14, 2019 | Added : ஜூலை 14, 2019 | கருத்துகள் (8)
Advertisement
Nal se Jal, scheme, Water, sanitation, investment, குடிநீர் திட்டம், நல் சே ஜல்,

புதுடில்லி: வரும், 2024க்குள் அனைவருக்கும் குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும் என்ற மத்திய அரசின், 'நல் சே ஜல்' திட்டத்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளில், 6.3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், இரண்டாவது முறையாக பா.ஜ., அரசு அமைந்த பிறகு, 'ஜல் சக்தி' என்ற பெயரில், நீர்வள அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது. முந்தைய அரசில், தனித் தனியாக இருந்த, குடிநீர் மற்றும் கழிவுநீர் அமைச்சகம், நீர்வளம் மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம் போன்றவை ஒருங்கிணைக்கப்பட்டு, இந்த புதிய அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது. வரும், 2024க்குள் அனைவருக்கும் குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட, நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், இந்த திட்டத்துக்காக, 28 ஆயிரத்து, 261 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், குடிநீர் மற்றும் சுகாதார துறையில், அடுத்த, ஐந்து ஆண்டுகளில், 6.3 லட்சம் கோடி ரூபாய் முதலீடு இருக்கும் என, ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. குழாய்கள், குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள், சிமென்ட் என, பல்வேறு வகைகளில், இந்த முதலீடு இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G Mahalingam - Delhi,இந்தியா
15-ஜூலை-201909:27:30 IST Report Abuse
G  Mahalingam இனிமேல் தனியார்தான் எல்லாம். வேலை செய்யவில்லை என்றால் வீட்டுக்கு அனுப்பி விடலாம் ஆனால் அரசாங்க ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப முடியாது. தனியார் லாபம் பார்த்தாலும் மக்களுக்கு சேவை ஒழங்காக கிடைக்கிறது. இதைதான் இன்றைய மக்கள் விரும்பிகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
15-ஜூலை-201907:44:02 IST Report Abuse
ஆரூர் ரங் மீட்டரில்லாமல் கட்டணமில்லாமல் தண்ணீர் கொடுக்காதீர். இலவசங்களை வீணாக்கித்தான் பழக்கமே
Rate this:
Share this comment
Adhithyan - chennai,இந்தியா
15-ஜூலை-201909:55:00 IST Report Abuse
Adhithyanயாரு மேல இருக்குற கோவத்துல உங்க உரிமையை வித்துடாதீங்க. தண்ணிக்கு காசு கொடுக்கும் நிலை வந்தால் மனித இனம் அழிவிற்கு அருகாமையில் இருக்கு னு அர்த்தம். இயற்கை வளங்களை விற்று காசு பார்க்க வேணும் என்பதை தானே வலியுறுத்தி வந்தார் அது இப்போ நடக்குது....
Rate this:
Share this comment
Rajathiraja - Coimbatore,இந்தியா
15-ஜூலை-201911:03:10 IST Report Abuse
Rajathirajaசோத்துக்கே வழியில்லை அதுக்குள்ள இலை ஓட்டை கத்துறியே....
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
14-ஜூலை-201923:08:41 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் 'நல் சே ஜல்', 'ஹர் கர் ஜல்'.. இப்படி ஜல் ஜல் ன்னு சத்தம் கேட்டு நம்ம கோவை அமைச்சருக்கு கையிலிருந்து உடம்பு முழுவதும் பரபரன்னு அரிக்க ஆரம்பித்திருக்கும். கோவை குடிநீர் விநியோகத்தை சத்தமில்லாமல் தனியாருக்கு கொடுத்து பல ஆயிரம் கோடி வசூல் பண்ணவராச்சே.. கொழாய் கவுர்மெண்டோடது, தண்ணி கவுர்மெண்டோடது ஆனால் வசூல் பண்ணி திங்க போறவன் ஒரு தனியார். இவனுக்கு பங்கு.. இந்த 6.3 லட்சம் கோடி இப்படி எவனெவனுக்கு தாரை வார்க்கப்பட்ட போகுதோ.
Rate this:
Share this comment
Muruga Vel - Mumbai,இந்தியா
15-ஜூலை-201900:48:51 IST Report Abuse
 Muruga Velபாலைவனத்துல இருக்கிறவர் இப்படி தான் நினைப்பார் .....
Rate this:
Share this comment
jagan - Chennai,இந்தியா
15-ஜூலை-201901:28:23 IST Report Abuse
jaganஅதான் கோவையில் இந்தவருஷம் தண்ணீர் பஞ்சம் இல்லையா? இப்ப டாலி ஆவுது...
Rate this:
Share this comment
Rajathiraja - Coimbatore,இந்தியா
15-ஜூலை-201911:08:03 IST Report Abuse
Rajathirajaஜெய்ஹிந்த்புரம் 4 கார்போரேட்டை சம்பாரிக்க வழிவைசெய்து கொடுத்தால் போது தான் கட்சி தானே வளரும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X