அனைவருக்கும் குடிநீர் திட்டம்: ரூ. 6.3 லட்சம் கோடி முதலீடு| 'Nal se Jal' schemeWater, sanitation likely to attract Rs 6.3 lakh crore investment in 5 years, says report | Dinamalar

பொது செய்தி

இந்தியா

அனைவருக்கும் குடிநீர் திட்டம்: ரூ. 6.3 லட்சம் கோடி முதலீடு

Updated : ஜூலை 14, 2019 | Added : ஜூலை 14, 2019 | கருத்துகள் (8)
Share
Nal se Jal, scheme, Water, sanitation, investment, குடிநீர் திட்டம், நல் சே ஜல்,

புதுடில்லி: வரும், 2024க்குள் அனைவருக்கும் குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும் என்ற மத்திய அரசின், 'நல் சே ஜல்' திட்டத்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளில், 6.3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், இரண்டாவது முறையாக பா.ஜ., அரசு அமைந்த பிறகு, 'ஜல் சக்தி' என்ற பெயரில், நீர்வள அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது. முந்தைய அரசில், தனித் தனியாக இருந்த, குடிநீர் மற்றும் கழிவுநீர் அமைச்சகம், நீர்வளம் மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம் போன்றவை ஒருங்கிணைக்கப்பட்டு, இந்த புதிய அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது. வரும், 2024க்குள் அனைவருக்கும் குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட, நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், இந்த திட்டத்துக்காக, 28 ஆயிரத்து, 261 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.


latest tamil news
இந்த நிலையில், குடிநீர் மற்றும் சுகாதார துறையில், அடுத்த, ஐந்து ஆண்டுகளில், 6.3 லட்சம் கோடி ரூபாய் முதலீடு இருக்கும் என, ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. குழாய்கள், குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள், சிமென்ட் என, பல்வேறு வகைகளில், இந்த முதலீடு இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X