பொது செய்தி

இந்தியா

முதுநிலை மருத்துவத்துக்கு, 'நீட்' இல்லை

Updated : ஜூலை 14, 2019 | Added : ஜூலை 14, 2019 | கருத்துகள் (5)
Advertisement
NEET exam,medical entrance test,நீட்

புதுடில்லி: மருத்துவப் படிப்புகளுக்காக, 'நீட்' எனப்படும், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதில், முதுநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கான, நீட் தேர்வை ரத்து செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தேசிய மருத்துவ கமிஷன் மசோதாவுக்கான திருத்தப்பட்ட வரைவில், இதற்கான அம்சம் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இது குறித்து, மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:இந்திய மருத்துவ சங்கத்துக்கு மாற்றாக, தேசிய மருத்துவ கமிஷன் அமைக்கும் வகையில், 2017ல் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இதில், பல்வேறு பிரிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டது.தற்போது, இந்த மசோதாவுக்கான, திருத்தப்பட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் மத்திய அமைச்சரவையில் இது குறித்து விவாதிக்கப்பட்டு, ஒப்புதல் பெறப்படும். அதன் பிறகு, திருத்தப்பட்ட மசோதா, பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும்.தற்போது, எம்.பி.பி.எஸ்., படிக்கும் மாணவர்களுக்கு, இறுதியாண்டில், 'நெக்ஸ்ட்' எனப்படும் தேசிய அளவிலான, பொது திறனறி தேர்வு நடத்தப்பட உள்ளது.


அதனால், முதுநிலை பட்டப் படிப்பில் சேருவதற்கு, மற்றொரு நுழைவுத் தேர்வு தேவையில்லை. எம்.பி.பி.எஸ்., படிப்பில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே, முதுநிலை படிப்பில் சேரலாம். பிரதமர் அலுவலகம் அளித்துள்ள பரிந்துரையின் அடிப்படையில், இது சேர்க்கப்பட்டு உள்ளது.எம்.பி.பி.எஸ்., முடித்த மாணவர்கள், டாக்டராக பணியாற்றுவதற்கு, 'லைசென்ஸ்' பெறுவதற்காக, தனியாக தேர்வு எழுதத் தேவையில்லை. அதே நேரத்தில், எய்ம்ஸ் கல்லூரியில், முதுநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு தொடரும். அதேபோல், டி.எம்., மற்றும் எம்.சி.எச்., போன்ற சிறப்பு படிப்புகளுக்கு நடத்தப்படும், சிறப்பு நுழைவுத் தேர்விலும், எந்த மாற்றமும் இல்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajathiraja - Coimbatore,இந்தியா
15-ஜூலை-201911:00:28 IST Report Abuse
Rajathiraja இப்பொழுதெல்லாம் இந்தியாவில் மருத்துவம் படிப்பது என்பது ஒரு சாபக்கேடுதான். பாவம் மாணவர்கள்.
Rate this:
Share this comment
Cancel
Baskaran - Thanjavur,இந்தியா
15-ஜூலை-201909:39:15 IST Report Abuse
Baskaran அரசின் கருத்தில் தெளிவில்லை. Next தேர்வு Exit தேர்வு போன்றதா? இத்தேர்வில் வெற்றி பெற்றால் தான் MBBS தேர்வில் வெற்றி பெற்றதாக கருதப்படுமா? என்பதைத் தெளிவு படுத்துவது பலரின் தேவையற்ற குழப்பத்தை நீக்கும். Exit தேர்வு கருத்துக்கு எற்கனவே பலமான எதிர்பு கிளம்பியது. ச.பாஸ்கரன், தஞ்சாவூர்
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
15-ஜூலை-201907:27:46 IST Report Abuse
ஆரூர் ரங் நல்லமுடிவுதான் . MBBS படிப்பு நாடு முழுவதும் ஒரே தரமாக இல்லாததால் அவர்களுக்கு National Exit Test (NEXT)தேர்வு அவசியம்தான்.மேலும் மேற்படிப்பு நீட் தேர்வுக்குப் படிப்பதற்காக ஹவுஸ் சர்ஜன் பயிற்சிக்கே வராமல் ஏமாற்றும் மருத்துவர்கள் பலருண்டு. படிப்பைவிட நோயாளிகளோடு பழகி நேரடிப்பயிற்சியளிக்கும் ஹவுஸ் சர்ஜன் காலம்தான் ஒரு முழுமையான மருத்துவரை உருவாக்குகிறது வெறுமனே ஏட்டுப்படிப்பாக MD /MS படிப்பவர்களாலேதான் நோயாளிகள் ஏமாற்றப்படுகின்றனர் .நோயாளிகளே வராத தனியார் ஏமாற்றுக்கல்லூரிகளில் MD MS DipNB ஏட்டுப்படிப்பாகப் படிப்பவர்கள் வெறும் லேப் ரிப்போர்ட் அடிபப்டையில் அரைகுறை டையாக்னோசிஸ் செய்து தவறான சிகிச்சை தருவது வெகுவாக அதிகரித்துள்ளது .எந்த நோய்த்தொற்று எனக கண்டுபிடிக்க இயலாமையிலானாலோ என்னவோ ஒரே நோயாளிக்கு மூன்று நுண்ணுயிர்க்கொல்லி ஆன்டிபயாட்டிக்குகள் வலிநிவாரணிகள் அல்சர் மருந்து வைட்டமின் என கலவையாக அநியாய மருந்துசீட்டுகள் புழக்கத்தில் காணலாம். இவற்றால் நோயும் தீர்வதில்லை.அனாவசிய மருந்துகளால் பக்கவிளைவுகள்.உண்டாகி மேலும் நோயாளியின் வாழ்நாள் சேமிப்பே ஆட்டயப்போடப்படுகிறது.தனியாரின் மருத்துவக் கல்வி அபாயம் அபாயமே அபாயம்
Rate this:
Share this comment
Madhav - Chennai,இந்தியா
15-ஜூலை-201913:55:50 IST Report Abuse
Madhavஉங்களுக்கு மருத்துவத்தை பற்றிய புரிதல் மிக குறைவு என்பது உங்களின் பதிவிலிருந்து தெரிகிறது. நானும் மருத்துவரில்லை ஆனாலும் எனது சகோதரி MS general surgeon அவர் ஏற்கனவே பகிர்ந்த ஒரு அனுபவம் தான் - //ஒரே நோயாளிக்கு மூன்று நுண்ணுயிர்க்கொல்லி ஆன்டிபயாட்டிக்குகள் வலிநிவாரணிகள் அல்சர் மருந்து வைட்டமின் என கலவையாக அநியாய மருந்துசீட்டுகள்// இந்த கலவையான நுண்ணுயிர்க்கொல்லி ஆன்டிபயாட்டிக்குகள் மிக தொடக்க நிலையில் உள்ள காச நோய்க்கு சரியான தீர்வு. சிறப்பான ஆன்டிபயாட்டிக்குகள் broader spectrum நுண்ணுயிர்க்கொல்லிகள் தான். அல்சர் மருந்து ஆன்டிபயாட்டிக்குகள் உருவாக்கும் பக்க விளைவான வயிற்றில் இருக்கும் நல்ல நுண்ணுயிரையும் கொல்வதால் ஏற்படும் விளைவை கட்டுப்படுத்த. //வெறுமனே ஏட்டுப்படிப்பாக MD /MS படிப்பவர்களாலேதான் நோயாளிகள் ஏமாற்றப்படுகின்றனர்// என்பதெல்லாம் உளறல்கள் மட்டுமே....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X