பதிவு செய்த நாள் :
கர்தார்புர் யாத்ரீகர்களுக்கு பாதுகாப்பு
பாக்.,கிடம் வலியுறுத்தல்

புதுடில்லி : 'அண்டை நாடான பாகிஸ்தானின், கர்தார்புரில் உள்ள குருத்வாராவுக்கான யாத்திரையை சீர்குலைக்க, அங்குள்ள சில அமைப்பு கள் முயற்சி செய்யும் அபாயம் உள்ளது. அதனால், உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என, மத்திய அரசு, தன் கவலையை தெரிவித்து உள்ளது.

கர்தார்புர், பாக்., வலியுறுத்தல், யாத்ரீகர்கள், பாதுகாப்பு


அண்டை நாடான பாகிஸ்தானின், கர்தார்புரில் உள்ள, தர்பார் சாஹிப் குருத்வாராவை, சீக்கிய குருவான, குருநானக், 1522ல் அமைத்தார். குருநானக்கின், 550வது பிறந்த நாள், இந்தாண்டு, நவம்பரில் கொண்டாடப்பட உள்ளது. நம் நாட்டின், பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்புர் மாவட்டத்தில் உள்ள, தேரா பாபா நானக் குருத்வாரா மற்றும் பாக்.,கில் உள்ள, கர்தார்புர் குருத்வாராவை இணைக்கும் வகையில், சிறப்பு பாதை அமைக்க வேண்டும் என, நீண்டகாலமாக பேசப்பட்டு வருகிறது.


ஒப்புதல்


இந்த நிலையில், கர்தார்புருக்கு இந்தியாவைச் சேர்ந்தவர்கள் பயணம் மேற்கொள்வதற்கு, பாகிஸ்தான் அரசு ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து, கர்தார்புருக்கு சிறப்பு பாதை அமைக்க இரு தரப்பும் சம்மதித்தன.

இதுவரை, கர்தார்புருக்கு செல்ல வேண்டு மானால், பஸ் மூலம் லாகூருக்குச் சென்று, அங்கிருந்து தான் செல்ல முடியும். இதற்காக, 125 கி.மீ., பயணம்
மேற்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், கர்தார்புர், இந்தியா - பாக்., எல்லையில் இருந்து, 4 கி.மீ., தொலைவில் உள்ளது. எல்லையில் இருந்தே, கர்தார்புர் குருத்வாராவை நேரடியாக பார்க்க முடியும். அதற்காக, உயரமான மேடையும் அமைக்கப்பட்டுள்ளது.

சாலை அமைப்பு

கர்தார்புரையும், குர்தாஸ்புரையும் இணைக்கும் வகையில், சிறப்பு பாதை அமைப்பதன் மூலம், இங்குள்ள சீக்கியர்கள், சுலபமாக செல்ல முடியும். விசா பெறுவது உட்பட, பல சிக்கல்களும் தவிர்க்கப்படும். தற்போது, இரு தரப்பிலும் இந்த சிறப்பு பாதைக்கான சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், இங்கு உள்ளவர்கள், கர்தார்புருக்கு பயணம் மேற்கொள்வதற்கான, வழிமுறைகளை வகுக்க, இரு தரப்பு சிறப்பு குழு, ஏப்ரலில் சந்தித்து பேசியது.


இரண்டாவது முறையாக, சிறப்பு குழு, இரு நாட்டின் எல்லையான, அட்டாரி - வாகாவில், பாக்., பகுதியில் நேற்று சந்தித்து பேசியது. நம் நாட்டின் தரப்பில், உள்துறை கூடுதல் செயலர், எஸ்.சி.எல். தாஸ் தலைமையிலான, எட்டு பேர் அடங்கிய குழுவில், உள்துறை, வெளியுறவுத் துறை, ராணுவம், தேசிய நெடுஞ்சாலை மற்றும் பஞ்சாப் மாநில அரசு அதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர்.

இரு தரப்பு பேச்சு குறித்து, வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்தி: இரண்டாம் கட்ட பேச்சு சுமுகமாகவும், வெற்றிகரமாகவும் அமைந்தது. ஆண்டு முழுவதும், சிறப்பு பாதை வழியாக, விசா இல்லாமல், நம் நாட்டினர் அங்கு செல்லலாம்.

Advertisement

ஆனால், சிறப்பு அனுமதியை முன்னதாகவே பெற வேண்டும். ஒரு நாளில், 5,000 பேர் பயணம் மேற்கொள்ளவும், சிறப்பு நாட்களில், கூடுதலாக, 10 ஆயிரம் பேர் செல்லவும் அனுமதி வழங்க, பாக்., தரப்பு சம்மதித்து உள்ளது. கர்தார்புர் - குருத்வாராவுக்கு செல்வதற்கு, ரவி நதியை கடக்க வேண்டும். வெள்ளப் பெருக்கு போன்றவற்றை கருத்தில் கொண்டு, அதன் மீது பாலம் அமைக்க வேண்டும் என்ற, நம் கோரிக்கையும், ஏற்றுக் கொள்ளப்பட்டது. இரு நாட்டின் எல்லையில், நம் பகுதியில், யாத்ரீகர்கள் செல்வதற்காக பாலம் அமைக்கப்படுகிறது.


அதேபோல், பாக்., தரப்பிலும் பாலம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம். கொள்கை அடிப்படையில், அது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. கவலை இந்த யாத்திரையை தடுக்கும் வகையில், பாக்.,கில் உள்ள, சில தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் முயற்சி செய்யும் ஆபத்து உள்ளது குறித்த, நம் கவலையை தெரிவித்துள்ளோம். அதனால், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என, வலியுறுத்தினோம். இந்தியாவுக்கு எதிரான எந்த நடவடிக்கையை அனுமதிக்க மாட்டோம் என, பாக்., தரப் பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X