பதிவு செய்த நாள் :
காங்., தலைவராக ராகுல்
தொடர்கிறாரா?

மும்பை : மஹாராஷ்டிரா மாநில தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான நியமனம் தொடர்பாக, காங்., வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு, காங்., தலைவராக ராகுல் தொடர்கிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

 காங்., தலைவராக, ஆலோசனை, ராகுல், தொடர்கிறாரா,


லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, காங்., தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக, ராகுல் ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனால், 'அவர் தொடர வேண்டும்' என, கட்சியின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.


அறிக்கை

இந்நிலையில், இம்மாதம், 3ம் தேதி வெளியிட்ட, நான்கு பக்க கடிதத்தில், 'என் ராஜினாமாவில் உறுதியாக உள்ளேன்; புதிய

தலைவரை தேர்வு செய்யுங்கள்' என, ராகுல் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து, கட்சியின் பொறுப்புகளில்இருந்த, மூத்த தலைவர்கள் பலர் விலகி வருகின்றனர். மஹாராஷ்டிரா மாநில, காங்., தலைவர் அசோக் சவானும், தன் பதவியை ராஜினாமா செய்தார்.


அதைத் தொடர்ந்து, மஹாராஷ்டிரா மாநிலத் தலைவராக, பாலசாகேப் தோரட் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் மாநில செயல் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான நியமனங்கள் குறித்தும், காங்., அறிக்கை வெளியிட்டுள்ளது.

கட்சியின் பொதுச் செயலர், கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், 'கட்சித் தலைவரின் ஒப்புதலுடன், இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன' என, குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

அதனால், காங்., தலைவராக ராகுல் தொடர்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து, காங்., மூத்த தலைவர்கள் கூறியதாவது: ராகுலின் ராஜினாமாவை, காங்கிரஸ் காரியக் கமிட்டி இன்னும் ஏற்கவில்லை. அதனால், அவர் கட்சியின் தலைவராக தொடர்கிறார்.


ஆலோசனை



மேலும், விரைவில் தேர்தல் நடக்க உள்ள மாநில தலைவர்களுடன், கடந்த மாதம், 27ல் ராகுல் ஆலோசனை நடத்தினார். அப்போதே எடுக்கப்பட்டது தான், இந்த நியமன முடிவுகள். அதனால், ராகுலின் ஒப்புதலுடன் தான், இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர்கள் கூறினர்.


Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
16-ஜூலை-201900:20:54 IST Report Abuse

Pugazh Vகாங்கிரஸ் எதிரிகளுக்கான செய்தி.ஹ.ஹ ஹ

Rate this:
Nagarajan D - Coimbatore,இந்தியா
15-ஜூலை-201920:39:31 IST Report Abuse

Nagarajan Dராஜினாமா டிராமா ஆடினால் யார் நம்புவார்கள். காங்கிரெஸ்ஸை அழித்து ஒழிக்க பிறந்தவன்.அவனும் அவன் குடும்பமும் இருக்கும் வரை காங்கிரஸ் விளங்காது. இந்தியாவிற்கு வலிமையான எதிர் கட்சி தேவை. இந்த கோமாளியின் கூட்டம் துரத்தி அடிக்க படவேண்டும்.

Rate this:
S. SIVAKUMAR - chennai,இந்தியா
15-ஜூலை-201915:15:12 IST Report Abuse

S. SIVAKUMARதோல்வியை கண்டு துவளாத மனஉறுதி மிக்க ஒரு தலைவர் காங்கிரஸ் கட்சிக்கு தேவை. தன் கட்சி தலைவர்களை பணிய வைக்க ராஜினாமா நாடகம் ஆடவேண்டிய நிலைமையில் இருக்கும் ஒருவரால் கட்சியை வழிநடத்தும் திறமை நிச்சயம் கிடையாது. அனால் காங்கிரஸின் நிலைமை ராகுலை விட்டால் ஆள் இல்லை.

Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X