பதிவு செய்த நாள் :
கர்நாடகாவில் காங்.,கின் சமரச முயற்சி தோல்வி
தொடருது எம்.எல்.ஏக்கள் ஓட்டம்

பெங்களூரு : கர்நாடகாவில், ஆளும் கூட்டணியின் அதிருப்தி, எம்.எல்.ஏ.,க்களை சமரசப்படுத்தும், காங்கிரஸ் தலைவர்களின் முயற்சி, தோல்வி அடைந்துள்ளதால், பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

கர்நாடகா, காங்., அதிருப்தி, எம்.எல்.ஏ.,க்கள்,தோல்வி


கர்நாடகாவில், முதல்வர் குமாரசாமி தலைமையிலான, மதச் சார்பற்ற ஜனதா தளம் - காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. அரசுக்கு எதிராக, ஆளும் கூட்டணி கட்சிகளின், 16 எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர். தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வதாக, சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். அவர்களது ராஜினாமா, இன்னும் ஏற்கப்படவில்லை. இது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம், நாளை முக்கியமான உத்தரவை பிறப்பிக்கவுள்ளது. இதனால், குமாரசாமி தலைமையிலான அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

பதவியை ராஜினாமா செய்ததாக கூறிய, எம்.எல்.ஏ.,க்களில் பெரும்பாலானோர், மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனந்த் சிங், ராமலிங்க
ரெட்டி, ரோஷன் பெய்க், சுதாகர், முனிரத்னா, நாகராஜ் ஆகியோர், மும்பை செல்லாமல், பெங்களூரிலேயே தங்கியிருந்தனர். இவர்களை சமாதானப்படுத்த, காங்கிரஸ் மூத்த தலைவர்கள், பல வழிகளிலும் முயற்சித்தனர். இதையடுத்து, சிக்கபல்லாபூர் தொகுதி, எம்.எல்.ஏ., சுதாகர், அவர்களை ஏமாற்றி விட்டு, நேற்று, மும்பை சென்றார்.


மற்றொரு, காங்கிரஸ், எம்.எல்.ஏ.,வான, நாகராஜுடன், நேற்று முன்தினத்திலிருந்து, காங்கிரஸ் தலைவர்கள், தொடர்ந்து பேச்சு நடத்தினர். அவருக்கு பலவிதமான ஆசை வார்த்தைகளை கூறி, சமாதானப்படுத்த முயற்சித்தனர். ஆனாலும், 17 மணி பேர சமரச பேச்சு, நேற்று தோல்வியில் முடிந்தது. நேற்று காலை, கோவிலுக்கு சென்று வருவதாக கூறி, வீட்டிலிருந்து புறப்பட்ட நாகராஜ், பெங்களூரு விமான நிலையத்திலிருந்து, சிறப்பு விமானத்தில், மும்பை பறந்து விட்டார். இவருடன், பா.ஜ., தலைவர்கள் சிலரும் சென்றனர்.

Advertisement

காங்கிரஸ் அதிருப்தி, எம்.எல்.ஏ.,க்களின் பட்டியல் அதிகரிக்கும் என தெரிகிறது. அஞ்சலி நிம்பால்கர், சவுமியா ரெட்டி, லட்சுமி ஹெப்பால்கர் உட்பட பலர், பா.ஜ.,வில் இணைய முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. இதனால், மதச் சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.


காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடகா அமைச்சருமான, சிவகுமார் கூறுகையில், ''குமாரசாமி அரசுக்கு எதிராக, ஆளும் கூட்டணி கட்சி, எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டளித்தால், அடுத்த நிமிடமே, அவர்களது பதவி பறிபோய் விடும்,'' என, எச்சரித்தார். இந்நிலையில், ''முதல்வர் குமாராமி, சட்டசபையில், இன்றே நம்பிக்கை ஓட்டு கோர வேண்டும்,'' என, பா.ஜ., மூத்த தலைவர், எடியூரப்பா வலியுறுத்தி உள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
16-ஜூலை-201900:19:06 IST Report Abuse

Pugazh Vபாஜக கடந்த5 வருடத்தில் அடித்த பணம் மற்றும் நன்கொடை என்ற பேரில் வசூவித்த 984 கோடி இவை தான் கர்நாடகாவில் புரள்கிறது. இதை பாஜக வினராலேயே மறுக்க முடியாது

Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
16-ஜூலை-201910:23:24 IST Report Abuse

Chowkidar NandaIndiaபாஜக கடந்த 5 வருடத்தில் அடித்த பணம் கர்நாடகாவில் புரள்கிறது என்று சொல்லும் நீங்கள், அப்படியே கான்க்ராஸ் கடந்த 60 வருடங்களில் அடித்த பணம் கூட எப்படியெல்லாம் கர்நாடகாவில் புரள்கிறது என்றும் கொஞ்சம் சொன்னால் நன்றாக இருக்கும். ...

Rate this:
Pannadai Pandian - wuxi,சீனா
15-ஜூலை-201920:13:05 IST Report Abuse

Pannadai Pandianசட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை நடத்த வேண்டும்….

Rate this:
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
15-ஜூலை-201918:44:36 IST Report Abuse

D.Ambujavalliஎங்களை பாருங்க, ஆடுகளைப் பட்டியில் அடைப்பதுபோல கூவத்தூரில் ஜாக்கிரதையாக ‘அடைகாத்து’ சட்டமன்றத்திலும் வாயடைக்க வைத்து... எத்தனை சாமர்த்தியமாக இருந்தோம். எங்ககிட்டே கத்துக்கக் கூடாது

Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X